Saturday, Jul 31, 2021

போலீஸ் அதிகாரி வேடத்தில் பிக்பாஸ் வின்னர் ஆரி

by Chandru Jan 19, 2021, 14:42 PM IST

கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். நெடுஞ் சாலை படம் அவரை முற்றிலுமாக மாற்றியது. இவர் ஆரியா என்று கேட்டும் அளவுக்கு முரட்டுத்தனமான பாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் சமூக அக்கறையுடன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். 3 ஆயிரம் மாணவர்களை வைத்து விதைகள் நட்டு கின்னஸ் சாதனை செய்தார். தமிழில் கையெழுத்துப் போட வேண்டும் என்று கையெழுத்து இயக்கமும் நடத்தினார்.

பிக்பாஸ் வின்னராக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் அவர் புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.உலக தமிழர்களைத் தன்வசப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று வரும் பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி அர்ஜுனன். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை இணைந்து தயாரிக்கின்றது. வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களாக படதொகுப்பாளராகவும், இந்தியாவில் செலிபிரிட்டி போட்டோ கிராபராக வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாகக் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்படப் பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.முதல் முறையாக ஒரு போலீஸ் ஸ்டோரி ஸ்கிரிபட்டில் நடிப்பதில் ஆரி அர்ஜுனன் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன், தனி ஒருவன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற் றிய பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும், தளபதி விஜயின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகள் மூலம் உலக தமிழ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புகழ்பெற்ற பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் மற்றும் படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் மற்றும் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள விசுவநாதன் இத்திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும், 25 ஆண்டு காலமாகச் சிறந்த சினிமா பிஆர்ஓவாக வலம் வரும் நிகில் முருகன் இப்படத் திற்கு பிஆர்ஓவாக உள்ளனர்.

You'r reading போலீஸ் அதிகாரி வேடத்தில் பிக்பாஸ் வின்னர் ஆரி Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்