ஒரு சிறிய விஜேவாக தொடங்கி முல்லை என்ற அடையாளத்துடன் பல உள்ளங்களில் வாழ்பவர் தான் சித்ரா. இவர் மிகவும் கஷ்ட்டப்பட்டு தனது சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர். பல அவமானங்கள், அசிங்கங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை கடந்து இன்று பேர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்நிலையில் சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது அவரது கணவரும் அதே ஹோட்டலில் தங்கி இருந்ததால் ஹேம்நாத்திடம் தொடர்ந்து ஏழு நாட்களாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது தெள்ள தெளிவாக ரிப்போர்ட் வந்தது. இதனால் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கண்ணோட்டத்தில் போலீஸ் விசாரணை நடத்தியது.
சித்ரா பல இடங்களில் கடன் வாங்கி தான் அவரது வீட்டை கட்டினார். இதனால் தான் அவர் கிடைத்த வாய்ப்பை எதையும் தவறவிடாமல் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துள்ளார். சித்ராவின் தாயாருக்கு அவளது மகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஹேம்நாத்துக்கு செலவு செய்ய கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருப்பினும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். சித்ரா கடனையும் அடைக்க வேண்டும் மற்றும் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் ஹேம்நாத்திடம் இருந்து எந்த விதத்திலும் ஆதரவு கிடைக்காததால் மனம் உடைந்துள்ளார். படப்பிடிப்பில் சித்ரா மற்ற ஆணுடன் நெருங்கி நடிப்பதால் சித்ராவை இனிமேல் நடிக்க வேண்டாம் என்று ஹேம்நாத் கட்டளை போட்டுள்ளார்.
அதை மீறி இவர் நடிப்பதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மற்ற ஆணுடன் சேர்த்து வைத்து பேசி சந்தேகமும் அடைந்துள்ளார். சம்பவ தினத்தன்று சித்ரா ஹோட்டலுக்கு வந்தவுடன் இன்றைக்கு எந்த ஆணுடன் ஆடி பாடி கொண்டிருந்தாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு சித்ரா நான் உன்னை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ஹேம்நாத் கோவப்பட்டு 'செத்து தொல' என்று கூறிவிட்டு ரூமுக்கு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸ் கூறி சித்ராவின் தற்கொலை வழக்கை மூடினர்.
அது மட்டும் இல்லாமல் சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய காரணமான ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹேம்நாத் ஜாமீனில் வெளிய வர மனு தாக்கல் செய்து இருந்தார். தற்பொழுது சித்ராவின் 10 வருட நண்பரான சையது ரோஹித் அவர்கள் ஹேம்நாத் மீது அடுக்கடுக்காய் குற்றசாட்டு வைத்துள்ளார். அதாவது சித்ராவின் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு இருந்துள்ளது. சித்ரா மீது தீராத சந்தேகத்தினால் தினமும் இருவருக்குள் வாக்கு வாதம் நடக்கும். ஹேம்நாத் கோபத்தினால் பல முறை சித்ராவை உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.