ரஜினி கைவிட்ட ஆன்மிக அரசியலை கையிலெடுக்கும் நடிகர்.. காவி உடையில் வலம் வருகிறார்..

Advertisement

அரசியல் உலகம் தற்போது மத ரீதியான உணர்வுடன் மாறி வருகிறது. இந்து கடவுள் பற்றி திரைப்படங்களில் விமர்சித்தாலோ அல்லது நடிகர்கள் யாராவது இந்துக்கள் பற்றி விமர்சித்து பேசினாலோ அவர்கள் மீது அரசியல் தாக்குதல் அதிகம் நடக்கிறது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் களத்தை ஆன்மீக அரசியல் என்று சொல்லி ஆரம்பித்தார். அதற்கு ஆதரவும், விமர்சனமும் இருந்தது. ஆனால் அவர் திடீரென்று அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லி விலகி விட்டார். ரஜினிகாநத் கைவிட்ட ஆன்மிக அரசியலை தற்போது மற்றொரு பிரபல நடிகர் கையிலெடுக்கிறார்.

மதம் எப்படி அரசியல் ரீதியாக பலன் தருகிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் அதன் போக்கில் தங்கள் அரசியல் பயணத்தை நடத்தி வருகின்றனர். இந்துத்துவா பற்றி பேசுபவர்கள் பாஜவில் இணைகின்றனர். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் தனது கட்சியை இந்துத்வா கட்சி போலவும் தன்னை இந்து மத தலைவராக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார். அதாவது ரஜினியின் ஆன்மிக அரசியலை கையிலெடுத்துள்ளார். ஆந்திரா, தெலங்கானாவில் பிரபலமானவர் நடிகர் பவன் கல்யாண். ஜன சேனா என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். பாஜவுடன் இணக்க மாக இருந்து வருவதுடன் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு கரம் நீட்டினார்.

இந்நிலையில் அவர் தன்னைத்தானே தற்போது இந்து மத தலைவராக அடையாளப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். கோவில்களுக்கு முன்பெல்லாம் சென்றால் பாரம்பரிய வேட்டி, சட்டையில் செல்வார் சமீபத்தில் அவர் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்யச் சென்றபோது சன்னியாசி போல் காவி உடுத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதத்தின் பெயரை சொல்லி பாஜகாலூன்ற முயலும் நிலையில் பவன் கல்யாணே அதை கையிலெடுத்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. காவி உடையில் பவன் கல்யாண் நடந்து வரும் புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் இந்துத்த்வா அரசியல் யுக்கி பலன் தருமா என்பது போகப் போக தெரியும். வக்கீல் சாப் படப்பிடிப்பில் கலந்த மாதம் நடித்து வந்த நடிகர் பவன் கல்யாண் மீண்டும் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>