திண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்

by Balaji, Jan 24, 2021, 17:54 PM IST

தேசிய தெய்வீகப் பேரவை யாத்திரை என்ற பெயரில் முக்குலத்தோர் சமுதாயம் சமுதாயத்தின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து ஆறு நாட்கள் 30 மாவட்டங்களில் இளைஞர்களை சந்தித்து வலியுறுத்த 6 கார்களில் கிளம்பி இருக்கிறார் கருணாஸ். இன்று காலை திண்டிவனம் புறவழிச்சாலையில் ஒரு உணவகத்தில் நின்றிருந்த அவரது காரை அங்கிருந்து செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்போது கருணாஸ் போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் புகுந்து பஸ் ரயில்களை தாக்கிய மக்களை தவிக்க விட்டனர். அப்போது என்ன செய்தீர்கள்? பாஜகவினர் வேல் யாத்திரை வந்தபோது தடுக்கவில்லை. நான் யாருக்கும் இடையூறு செய்யாமல் ஐந்து கார்களுடன் செல்கிறேன். என்னை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடுமையாக வாக்குவாதம் செய்தார் செய்தார் ஆனால் போலீசார் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தனர்.

கருணாஸ் என்று சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்தினால் தான் அவரது காரை போலீசார் நிறுத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கருணாஸ், நான் என்றுமே அன்றைக்கும் என்று என்றைக்குமே சசிகலாவின் ஆதரவாளர் தான். அவரால்தான் ஜெயலலிதாவை சந்தித்து எம்எல்ஏ ஆக முடிந்தது . அதில் என்ன தவறு இருக்கிறது? அவர் எங்களது சமுதாயத்தை சார்ந்தவர். அதை சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அவர் நலமுடன் திரும்பி வந்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றார்

You'r reading திண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை