Wednesday, Apr 14, 2021

நரமாமிசம் உண்ணும் கதையில் பிரபல நடிகை...

by Chandru Jan 25, 2021, 11:15 AM IST

மனிதனை மனிதன் கடித்து கொல்லும் ஜாம்பி கதையாக ஜெயம் ரவி நடித்த மிருதன் படம் உருவானது. அதேபோல் யோகிபாபு நடித்த ஜாம்பி படம் வந்தது. தற்போது நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் ட்ரிப். வரும் பிப்ரவரி 5ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சாய் பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ.பிரவீன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், வி.ஜே. சித்து, வெ.ஜே ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள். “ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் படக்குழுவை நேற்று வெளியிட்டது.

இதில் பட இயக்குநர் டென்னிஸ் மஞ்சு நாத் கூறியதாவது: இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் பணியாற்றிய போது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என அப்போது கூறினார். தயாரிப்பாளர்கள் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ.பிரவீன்குமார் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன். தமிழ் சினிமா ஏற்கனவே ஜாம்பிகளை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அங்கு ஹாரரும் திரில்லரும் கலந்தே எடுப்பார்கள். ஆனால் நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது. இதில் நடித்திருக்கும் லட்சுமி ப்ரியா மிகச்சிறந்த நடிகை.

இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வரும். திரைக்கதை எழுதும் போதே கல்லூரி தினேஷ் எனது மனதில் இருந்தார். நான்சி ஜெனிஃபர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். ஆ.ஜே. சித்து அவரது நகைச்சுவைக்காக அதிகம் கொண்டாடப்பட்டிருக்கிறார் ஆனால் இப்படத்தில் முற்றிலும் அவருடைய வேறொரு முகத்தை பார்க்கலாம். விஜே வினோத் திடீரென ஒரு கணத்தில் படத்திற்குள் வந்தார். சுனைனா இப்படத்தை ஒப்புகொண்டதிற்காக, அவருக்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அவரை உணர்வூபூர்வமான அல்லது ரொமான்ஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படத்தில் அவரை காமெடி கலந்த ஆக்ஷன் அவதாரத்தில் காண்பீர்கள். பிரவீன் படம் முழுதும் மிகப்பெரும் துணையாக இருந்தார். ரசிகர்கள் பொழுது போக்கிற்காக மிகப்பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.

இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரும் முன்னெடுப்பாக துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்டதற்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால் தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சக்திவேலன் எங்கள் படத்தை பார்த்து, படத்தின் உரிமை பெற்று பெரிய வெளியீடாக திரையிடவுள்ளது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளது. நல்லிதயம் கொண்ட மனிதர். திரைப்படம் பற்றிய அபார அறிவு கொண்டவர். இங்கு அவரது இருப்பு கடவுளின் இருப்பை போன்று பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நடிகை சுனைனா கூறியதாவது: இப்படத்தில் நடிப்பதற்காக எத்தனை ஹீரோயின்களை பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. இப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறினார்.

அதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றியும் கூறினார். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி. இதை ஆக்‌ஷன் காட்சியில் நடித்தேன் சிறியதாக அடிபட்டால்கூட ஓடி வந்து வலிக்கிறதா என்று கேட்பார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாக பார்த்துகொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஒரு நாயுடன் நடிக்க போவதாக கூறினார்கள் . அது ரிம்பவும் ஸ்டிராங்காக இருந்தது. அதனால் அதற்கு பிஸ்கெட் கொடுத்து பழகினேன். அதன்பிறகே அதனுடன் நடித்தேன். அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம். இவ்வாறு சுனைனா கூறினார்.தயாரிப்பாளர் வி.விஸ்வநாதன், சக்திவேலன், நடிகர்கள் பிரவீன் குமார் , கருணாகரன், இசையமைப்பாளர் சித்து, ஒளிப்பதிவாளர் உதயசங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பேசினார்கள்.

You'r reading நரமாமிசம் உண்ணும் கதையில் பிரபல நடிகை... Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை