சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க முடிவாகி ஐதராபாத்தில் ராமொஜிராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 12ம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க தனி விமானத்தில் சென்றார் ரஜினிகாந்த். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ரஜினி காந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை பெற்றவர் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்பினார். டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடுவேன் என்று ரஜினி ஏற்கனவே அற்வித்திருந்தாதால் அதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எல்லோரும் எதிர்பார்ததிருந்த நிலையில், அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் ரஜினிகாந்த். கொரோனா காலகட்டத்தில் உடல்நிலையை கருதி ரஜினியை முழு ஓய்வில் இருக்க டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் பலர் அவர் வீட்டு முன்னால் அமர்ந்து ரஜினியை அரசிய லில் ஈடுபட கேட்டு கோஷம் எழுப்பினார்கள். பிறகு வள்ளுவர் கோட்டம் அருகிலும் போராடத்தில் ஈடுபட்டனர். ஆனால் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்னை வற்புறுத்தாதீர்கள் என்று மீண்டும் அறிக்கை மூலம் தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்போது ரஜினிகாந்த் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுக்கிறார். இதையடுத்து வரும் நவம்பர் 4ம் தேதி மாதம் தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவன அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.