குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகிறது ஃபாஜி கேம்: ஆண்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும்

by SAM ASIR, Jan 25, 2021, 20:06 PM IST

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன மொபைல் கேம் பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அதேபோன்ற விளையாட்டான ஃபாஜி (FAU-G) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பாலிவுட் நட்சத்திரமான அக்சய்குமார் இந்த கேமை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் என்ற நிறுவனம் ஃபாஜி (FAU-G: Fearless and United Guards) கேமை வடிவமைத்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் சீன படையினரை எதிர்கொள்வதை பின்னணியாக கொண்டு இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்பட்டது. "இதை விளையாடுபவர்கள் நம்முடைய இராணுவ வீரர்களின் தியாகத்தை அறிந்துகொள்வார்கள்" என்று அக்சய்குமார் தெரிவித்ததால் இதைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இது பலர் (multiplayer) பங்குபெறக்கூடிய விளையாட்டு ஆகும். ஆனால், அறிவிக்கப்பட்டபடி கடந்த அக்டோபர் மாதம் ஃபாஜி வெளியிடப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இதற்கான முன்பதிவு ஆரம்பித்தது. இதில் பதிவு செய்தவர்களுக்கு கேம் வெளியிடப்பட்டதும் அவர்களது சாதனத்தில் தானாகவே பதிவிறக்கமாகிவிடும்.

மொபைல்போன் ஃபாஜி கேம் தரவிறக்கம் செய்யப்படக்கூடிய தரத்தில் இருக்கவேண்டும். முன் பதிவு அறிவிக்கப்பட்ட மூன்று நாள்களில் 10 லட்சம் பேருக்கும் மேலாக முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கால் ஆஃப் டூட்டி, மாடர்ன் காம்பேட் 5, மாடர்ன் வார், ஆஃப்டர்பல்ஸ், வார்ஃபேஸ், ஃபோர்ட்நைட், கரீனா ஃப்ரீ ஃபயர், சைபர் ஹண்டர் போன்ற கேம்களுக்கு ஃபாஜி (FAU_G) போட்டியாக அமையக்கூடும் என்று கருதப்படுகிறது. ஐஓஎஸ் பயனர்களுக்கான முன்பதிவு அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. இதை கூகுள் ப்ளேயில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You'r reading குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகிறது ஃபாஜி கேம்: ஆண்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை