பிரபல நடிகை மீண்டும் உடல் குறைப்பு முயற்சி.. பீட்சா சாப்பிடாமலிருப்பாரா?

Advertisement

நடிகை நமீதாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது, தமிழ் நடிகைகளில், ரசிகர்களை முறை வைத்து மச்சான் என்று அழைப்பவர். எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மகா நடிகன், சாணக்யா, கோவை பிரதர்ஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார். வாய்ப்பும், பணமும் அதிகமான நிலையில் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைக்க தவறிவிட்டார். சீக்கிரமே உடலில் வெயிட் போட்டு தனது அழகான உடற்தோற்றதை இழந்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்புக்கள் குறையத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் நயன்தாரா, திரிஷா என பல நடிகைகள் போட்டிக்களத்தில் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். 2012 முதல் 15ம் ஆண்டு வரை அவருக்கு வாய்ப்புகள் டல்லடித்தது.

கடைசியாக 2019ம் ஆண்டு பொட்டு படத்தில் மந்திரவாதியாக நடித்தார். இதற்கிடையில் அவர் ஒரு முறை முறையான உணவு கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உடல் இளைத்து இது நமீதாவா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந்தார். இனி விட்ட இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2017ம் ஆண்டு பாய்ஃபிரண்ட் வீரேந்திரா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் 2019ம் ஆண்டு பாஜகட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டார். ஆனால் அரசியலும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. மீண்டும் நமீதா சினிமா பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு மியா என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழ், மலையாளத்தில் உருவாகும் பவ் பவ் என படத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவில் அவர் படப்பிடிப்பில் இருந்தபோது கிணற்றில் தவறி விழுந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது நமீதா உடற் பயிற்சி செய்யும் முயற்சியில் வியர்வை சொட்ட சொட்ட தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். நமீதா உடற்பயிற்சி செய்யும் இரண்டு வீடியோவை பகிர்ந்துக் கொண்டு அதில் தனது வயிறு பகுதி குறைந்து பிளாட் ஆகி இருப்பதை காட்டும் படியாக உடை அணிந்து வயிற்றை காட்டியபடி நின்றார். தற்போது இளம் ஹீரோயின்கள் அதிகமாக கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் நிலையில் நமீதாவின் உடற்குறைப்பு முயற்சி கைகொடுக்குமா என்ற கேள்வி உள்ளது. அதே சமயம் நமீதாவுக்கு பீட்சா என்றால் ரொம்ப பிடிக்கும் அதை உண்பத்தில் கட்டுப்பாடு காட்டினால் உடல் குறைப்பு முயற்சி கைகொடுக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் பகிர்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>