தமிழில் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ஒரு சில பிரபலமான முகங்களும் பிரபலம் இல்லாதவர்களும் பங்கேற்கின்றனர். 100 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியுலக தொடர்பே இல்லாமல் தங்கி இருந்து அதில் சாமர்த்தியமாக வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் பிரபலமில்லாத முகங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆவதுடன் சினிமா வாய்ப்புகளும் பெறுகின்றனர். ஓவியா முதல் ரேகா வரையும், அரவ் முதல் ஆரி வரையிலும் பலர் இதில் பங்கேற்று பிரபலம் ஆகியிருக்கிறார்கள்.
பிக்பாஸ் அழைப்பு வந்தால் அதில் இடம்பெறலாம் என்று பலர் காத்திருக்கின்றனர். பிக்பாஸில் பங்கேற்பவர்களுக்கு அதை நடத்தும் நிர்வாகிகள்தான் கண்டிஷன் விதிக்கின்றனர். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் நான் பங்கேற்கத் தயார். ஆனால் அதற்கு நிபந்தனை உண்டு என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். அந்த இயக்குனர் வேறுயாருமல்ல ராம் கோபால் வர்மா தான்.பிக் பாஸ் பற்றி உங்கள் கருத்து என்ன, நீங்கள் அதில் பங்கேற்பீர்களா ? என்று ராம் கோபால் வர்மாவிடம் கேட்டதற்குப் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:பிக்பாஸ் வீட்டில் நான் தங்கத் தயார். ஆனால் 15 பெண் போட்டியாளர்களை என்னுடன் அனுப்ப வேண்டும். ஆண் போட்டியாளர்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அப்படிச் செய்தால் பிக்பாஸ் வீட்டில் எத்தனை நாள் வேண்டுமானாலும் நான் தங்க தயார். ஆனால் அது நடக்காது. அப்படியே பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டாலும் தெலுங்கில் கலந்து கொள்ள மாட்டேன். தமிழ் அல்லது இந்தியில் நடக்கும் பிக்பாஸ் ஷோவில் தான் பங்கேற்பேன் என்றார்.