அடிச்சா சிக்சர்: காமெடி நடிகரின் கிரிக்கெட் ஆர்வம்.. இவர் மாநில சேம்பியன்..

Advertisement

கோலிவுட்டில் யார் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ காமெடி நடிகர் யோகி பாபு படுபிஸியாக இருக்கிறார். அவர் பிரதானமாக நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களுக்குக் கூட வரமுடியாதளவுக்கு அந்த நேரத்திலும் வேறு படங்களின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.அட்ட கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து சார்பட்டா பரம்பரை என்ற படம் உருவாகி இருக்கிறது. இதற்கிடையில் பா.ரஞ்சித் படங்களும் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் பொம்பை நாயகி என்ற படத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

யோகிபாபுவை காமெடியனாகத்தான் பலருக்கும் தெரியும் அவர் ஒரு விளையாட்டு வீரர் என்பது பலருக்குத் தெரியாது. இவர் சிறந்த கிரிக்கெட் வீரர். பள்ளியில் படிக்கும் போது மாநில சேம்பியனாக இருந்தார். கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவான பிகில், ஜடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த தகவலை யோகிபாபுவே டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கடலூரில் நடந்த பொம்மை நாயகி ஷூட்டிங்கின் போது கிடைத்த இடைவேளையில் யோகி பாபு அப்பகுதியில் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். பந்து வீசப்பட்டதும் அதை பவுண்ட்ரி, சிக்ஸர் என அடித்துத் தெறிக்க விட்டார். யோகிபாபு கிரிக்கெட் ஆடிய வீடியோ நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் மா கா பா இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

பொம்மை நாயகி படம் தந்தை, மகளுக்குமான பந்தத்தை சொல்லும் கதை. இருவரும் அரசியல் முறையால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் கதை. ஷான் இயக்குகிறார். இதில் டீ ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளியாகவும் ஒரு மகளின் தந்தையாகவும் யோகி பாபு நடிக்கிறார். இயக்குனர் ஷான் ஏற்கனவே சில இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறார். பா.ரஞ்சித்திடம் இப்படத்தின் ஸ்கிர்ப்ட்டை சொன்னபோது அவருக்குப் பிடித்தது. படமாகத் தயாரிக்க ஒப்புக்கொண்டார். ஏற்கனவே ரஞ்சித் பரியேறும் பெருமாள், குண்டு ஆகிய படங்கள் தயாரித்திருக்கிறார்.நடிகர் யோகிபாபு சமீபத்தில் ஒரு குழந்தைக்குத் தந்தையானார். அவரது மனைவி மஞ்சு பார்கவி கடந்த மாதம் அழகான குழந்தை பெற்றெடுத்தார். அடுத்து யோகி பாபு தனுஷுடன் நடித்துள்ள கர்ணன் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>