இயக்குனர்கள் சர்ச்சைக்கு பெயர்பெற்றவர் ராம் கோபால் வர்மா. மும்பை அண்டர் வேல்டு தாதாக்கள் பற்றி படம் இயக்கி பரபரப்பாக பேசப்பட்டார். ஒரு கட்டத்தில் இந்தி படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தெலுங்கு படங்கள் இயக்குவதில் கவனம் திருப்பினார். பிறகு அடல்ட் படங்களில் முழுமையாக ஈடுபாடு காட்டி அப்படங்களை ஒடிடியில் வெளியிட்டார். கடந்த ஆண்டு இறுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பது பற்றி படம் இயக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் அண்டர்வேல்டு தாதா தாவூத் இப்ராகிம் பற்றி தற்போது படம் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 'டி கம்பனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது.ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி எனப் பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்குப் படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ராம் கோபால் வர்மா.
இவர் தற்போது 'டி கம்பனி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ராஹிம் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்ற வாளி என்பது அனைவரும் அறிந்த கதையே. எல்லோருக்கும் தெரிந்த அந்தச் சம்பவத் தை நிழல் உலகத்தின் பின்னணியை சுவாரஸ்யம் குறையாமல் தத்ரூபமாகப் படமாக்கி 'டி கம்பனி' திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.கடந்த 2002-ல் 'கம்பெனி' என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டாராஜன் பற்றி அரசல்புரசலாக வெளி வந்த தகவல்களை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில், பில்கேட்ஸ், திருபாய் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறும் தொட்டுச் செல்லப்படுகிறது.ஆனால், இப்போது உருவாகியுள்ள 'டி கம்பனி' திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.