கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும். பல நடிகைகள் தங்களது விடுமுறை பயணத்தை திட்டமிட்டனர். நடிகைகள் காஜல் அகர்வால், டாப்ஸி, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங். பிரணிதா, ராஷ்மிகா, கங்கனா ரனாவத் என பல நடிகைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்தனர். கூண்டிலிருந்து பறந்த பறவைகள் போல் அவர்கள் சுதந்திரமாக நீச்சல் உடை அணிந்தும் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்தும் மகிழ்ந்தனர். ஆனால் பல நட்சத்திரங்களின் தங்களின் படங்களின் கால்ஷீட் அழைப்பால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் போன்றவர்கள் ஒட்டுமொத்தமாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. பட நடசத்திரங்கள் மற்றும் படக்குழு அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டனர். பிஸியாக படப்பிடிப்பிலிருந்த திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி போன்றவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய ஐதராபாத் சிட்டியையே சுற்றுலா, தளமாக்கிக் கொண்டு சுற்றுத்திருந்தனர். ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் இரண்டு குழந்தைகள், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மாவும் அவரது மகனுடனும் இதில் இடம்பெற்றனர். கூடவே அவர்களின் செல்ல நாயும் வந்திருந்தது. அனைவரும் பூங்காவிற்கு சென்று மகிழ்ச்சியாக பேசியும் விளையாடியும் பொழுதை கழித்தனர். தங்களின் ஜாலியான விளையாட்டுத் தனத்தை படம் பிடித்து நெட்டில் வெளியிட அது வைரலாகி இருக்கிறது. ஆர்த்தி ரவி மற்றும் அவரது இரண்டு மகன்களும் போனி வர்மா மற்றும் அவரது மகனும் பொன்னியன் செல்வன் நடிகர்களுடன் பேசி மகிழ்ந்தனர். ஆர்த்தி ரவி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இப்போது வைரலாக உள்ள புகைப்படத்தில், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் ஐதராபாத்தில் திரிஷா, ஆர்த்தி ரவி மற்றும் போனி பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் போஸ் கொடுப்பதைக் காணலாம். ஐதராபாத் டைரிகள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, திரிஷா பூபோட்ட ஸ்கர்ட் அணிந்து அழகாக தோற்றமளித்தார். மற்றொரு புகைப்படத்தில், ஜெயம் ரவி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் மகன்கள் திரிஷா, ஆர்த்தி மற்றும் போனி ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றொரு புகைப்படத்தில் த்ரிஷா ஆர்த்தியையும் போனியையும் கட்டிப்பிடிப்பதைக் காட்டுகிறது. அண்மையில், ஐஸ்வர்யாராய்யும் ஐதராபாத் தெருக்களில் நடந்து சென்றார். அவரை கண்ட ரசிகர்கள் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த படங்களை ஐஸ்வர்யாவின் ரசிகர் இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்ந்தார். பொன்னியன் செல்வன் ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது. இது கல்கி எழுதிய தமிழ் இலக்கிய சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் சியான் விக்ரம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், லால், சோபிதா சுலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.