பிரபல நடிகை விமான பயண சோர்வால் ரெஸ்ட்..

தமிழில் முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே, இவர் அல்லு அர்ஜுனுடன் நடித்த அல வைகுந்தபுரமுலோ தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு அல்லுவுடன் அவர் ஆடிய நடனம் அவரை பேச வைத்தது. இவர் தெலுங்கு இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே தனது அடுத்த இந்தி படமான, 'சர்க்கஸ் படப்பிடிப்பிற்காக தனது சொந்த ஊரான மும்பைக்கு திரும்பியுள்ளார். இந்தி, தெலுங்கு படங்களின் படப்பிடிப்பிற்காக கடந்த சில மாதங்களாகவே அவர் ஐதராபாத் மற்றும் மும்பை இடையே மாறி மாறி பறந்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது ரோஹித் ஷெட்டி இயக்கும் சர்க்கஸ் படத்திற்காக மும்பைக்கு திரும்பி வந்துள்ளார். பிரபாஸ் நடிக்கும் பூஜா ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் ஷூட்டிங்கிற்காக தங்கி இருந்தார் பூஜா. சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு மும்பைக்கு பறந்தார். விமானத்தில் மாறி மாறி மாநிலம் விட்டு மாநிலம் பறந்துகொண்டிருந்த நிலையில் பயண சோர்வு அடைந்திருக்கிறார். எனவே இந்தி ஷூட்டிங்கிற்கு முன் சில நாட்கள் சிறிது நாட்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு வழக்கம்போல் தனது வேலையை தொடங்க விருக்கிறாராம்.

ரோஹித் ஷெட்டி இயக்கும் சர்க்கஸ், 1982ம் ஆண்டு சஞ்சீவ் குமார், மவுசுமி சாட்டர்ஜி மற்றும் தேவன் வர்மா நடிப்பில் வெளியான அங்கூர் நகைச்சுவை கிளாசிக் படத்தின் ரீமேக் என்று வதந்தி பரவியது. ஆனால் அதனை இயக்குனர் மறுத்தார். சர்க்கஸ் படத்தில் ரன்வீர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த்த ஜாதவ், ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா, சுராஜேஷ் ஹிர்ஜி, விஜய் பட்கர், சுல்பா ஆர்யா, முகேஷ் திவாரி, அனில் சரஞ்சீத் மற்றும் அஸ்வினி கல்சேகர் போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். நடிகர் சல்மான் கானுடன் கபி ஈத் கபி தீபாவளி மற்றும் அகில் அக்கினேனியுடன் மோஸ்ட் எளிஜிபில் பேசுவலர் ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :