ஷோலே பட சீனியர் நடிகர் காலமானார்..

கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்களை திரையுலகம் இழந்தது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடத்த ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதன்பிறகு இந்தி பிரபல நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் இருவரும் அடுத்தடுத்து மாரடைப்பில் மரணம் அடைந்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே கேன்சர் பாதிப்புக்குள்ளாகி அமெரிக்கா சென்று சுமார் ஒரு வருடம் சிகிச்சை பெற்று திரும்பியவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி ஷோலே படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெக்தீப் தனது 81வயதில் காலமானார். இவர் இந்தியில் 200க்கணக்கான படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர். தர்மேந்திரா, அமிதாப்பச்சன் இணைந்து நடித்த படம் ஷோலே. இப்படத்தை ரமேஷ் சிப்பி இயக்கினார். 1975ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ஏராளமான நடசத்திரங்கள் நடித்திருந்தனர். வில்லன் நடிகராக அம்ஜத்கான் நடித்திருந்தார்.

அதன்பிறகு அவர் இந்தியில் நம்பர் ஒன் வில்லன் நடிகராக வலம் வந்தார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1992ம் ஆண்டு இறந்தார். தற்போது ஷோலே படத்தில் நடித்த மற்றொரு சீனியர் நடிகர் காலமானார். ஷோலே மற்றும் பல்வேறு இந்தி படங்கள் மற்றும் குஜராத் நாடகங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த் ஜோஷி. இவர் பிரபல இந்தி நடிகர் ஷர்மன் ஜோஷியின் தந்தை ஆவார். ஷர்மான் ஜோஷி மிஷன் மங்கல். ஃப்யுஜி காலிங், மும்பை சாகா போன்ற ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் அரவிந்த் ஜோஷி வயது முதிர்வு காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அரவிந்த் ஜோஷி குஜராத்தி நாடகம் மற்றும் ஃபிலிம் சர்க்யூட்டில் நன்கு அறியப்பட்டவர். அப்மான் கி ஆக் (1990), ஷோலே (1975) மற்றும் இட்டெபாக் (1969) போன்ற பல படங்களில் நடித்தவர்.

அவரது உடல் தகனம் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள வைல் பார்லே கல்லறையில் நடைபெறும். அரவிந்த் ஜோஷியின் மறைவு குறித்து ரசிகர்களுக்கு பாலிவுட் பட விமர்சகர் கோமல் நத்தா டிவிட்டரில் தெரிவித்தார். "மூத்த மற்றும் மரியா தைக்குரிய நடிகர்-இயக்குனர் குஜராத்தி தியேட்டரின் இயக்குனர் அரவிந்த் ஜோஷி காலமானார். மகன் ஷர்மன் ஜோஷி, மகள் மான்சி ஜோஷி ராய் மற்றும் முழு குடும்பத்தினருக்கும் இரங்கல்." என அவர் குறிப்பிட்டிருந்தார். அரவிந்த் ஜோஷிக்கு மனைவி மற்றும் ஷர்மன் ஜோஷி மற்றும் மான்சி ஜோஷி ராய் பிள்ளைகள் உள்ளனர். மான்சி நடிகர் ரோஹித் ராயை திருமணம் செய்து கொண்டார். ஷர்மன் ஜோஷி, பிரேம் சோப்ராவின் மகள் ப்ரேரானா சோப்ராவின் கணவர். நடசத்திர குடும்பத்தை சேர்ந்த மறைந்த அரவிந்த் ஜோஷி நடிகை சரிதா ஜோஷியின் மைத்துனர் மட்டுமல்ல, நடிகை கெட்கி டேவ் மற்றும் பூர்வி ஜோஷியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :