தமிழுக்கு வரும் ஸ்ருதி நடித்த தெலுங்கு படம்.. நடிகைக்கு லக்கி ஸ்டார் பட்டம் பெற்று தந்த சினிமா

by Chandru, Jan 29, 2021, 15:06 PM IST

ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட் டடித்தது “க்ராக்” தெலுங்கு திரைப்படம். இதில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் பிப்ரவரியில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது. தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படுபவர் நடிகர் ரவிதேஜா. இவர் ஹீரோவாக நடிக்க தயாரிப்பாளர் பி மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்த தெலுங்கு படம் “க்ராக்”. நீண்ட கொரோனா பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த சங்கராந்தி விழா சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் மாஸ்டர் படம் போல் திரையரங்குகளுக்கு அலை அலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ், கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் செய்த இதுவரையிலான வசூல் சாதனையை இப்படம் முறியடித்து. சாதனை படைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம். படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் தவிர தமிழ் நாடு, கேராளாவிலும் வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அப்படங்கள் பெரிய வெற்றி அடையாததால் அவரை ராசி இல்லாத நடிகை என்று அங்கு கிசு கிசு எழுதி வந்தனர்.

கிராக் படம் வசூல் சாதனை படத்ததையடுத்து அவர் இப்போது ராசியான நடிகை என முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலக்‌ஷ்மி சரத் குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டன் சிவா என தமிழக நடிகர்களே அதிகம் நடித்துள்ளனர். தமிழக தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பங்குகொண்டுள்ளனர். தமிழகத்திலும் கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரியினை ஏற்ற படக்குழு “க்ராக்” படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்” பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது.

You'r reading தமிழுக்கு வரும் ஸ்ருதி நடித்த தெலுங்கு படம்.. நடிகைக்கு லக்கி ஸ்டார் பட்டம் பெற்று தந்த சினிமா Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை