Saturday, May 15, 2021

ஓட்டபயிற்சி முடிந்து கிரிக்கெட்டுக்கு தாவிய டாப்ஸி..

by Chandru Jan 30, 2021, 20:40 PM IST

எல்லா நடிகைகளும் தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் தனது கதாபாத்திரம் பற்றி அதிகம் பேச விரும்புவார்கள். ஆனால் ஒரு நடிகை தனது கதாபாத்திரம் மற்றும் பட தகவல்களை பின்னால் எதிர் கொள்ளவிருக்கும் போராட் டத்துக்காக வெளியிடாமல் வைத்திருக்கிறார். மேலும் தடகள வீராங்கணை நடிப்புக் காக ஓட்டப் பயிற்சி செய்தவர் அடுத்து கிரிக்கெட் பயிற்சிக்கு தாவினார். அவர் வேறு யாருமல்ல நடிகை டாப்ஸி.

இந்தி படங்களில் தனக்கென ஒரு பாதை வகுத்து நடை போட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற நடிகைகள் ஏற்க தயங் கும் வேடங்களை ஏற்று அதில் முத்திரை பதித்து தொடர்ச்சி யாக அதேபோல் மாறுபட்ட வேடங்களுக்காக தன்னை தயாராக வைத்திருக்கிறார். ஏற்கனவே உத்தரபிரதேசத்தை சேர்ந்து குறிதவறாமல் துப்பாக்கியால் சுடும் வயதான பெண்ணின் உண்மை சம்பவத் தில் நடித்தார் டாப்ஸி. தற்போது தடகள வீரங்கனை கதாபாத்திரம் ஏற்று நடிக்கி றார். இதற்காக அவர் விளை யாட்டு மைதானத்துக்கு சென்று பயிற்சியாளர் மேற் பார்வையில் கடுமையான ஓட்ட பயிற்சிகள் மேற் கொண்டார். இதுபோன்ற காட்சியில் நடித்தபோது சோர் வாகி கீழேயும் விழுந்திருக் கிறார். ராஷ்மி ராக்கெட் என அப்படத்துக்கு பெயரிடப் பட்டுள்ளது.

இது பற்றி டாப்ஸி கூறும் போது,ராஷ்மி ராக்கெட் படப் பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் அப்படம் திரைக்கு வர போராட்டங்களை எதிர் கொள்ளும் சூழல் உள்ளது. அந்த போராட்டத்தை சந்திக் கும் துணிவும் தயாரிப்பாளர், இயக்குனர், படக் குழுவுக்கும் இருக்கிறது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பேன். படத் தை பற்றி முழுமையாக இப்போதே சொல்வதற்கு பதில் எதிர்வரவிருக்கும் எதிர்ப்பு நேரத்தில் அதுபற்றி அதிகம் பேச உள்ளேன் என்றார்.

டாப்ஸி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் படுகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை பெரும் ரசிகர்கள் கூட்டம் பின்தொடர்கிறது. அவர்களை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சமும் டாப்ஸிக்கு அத்துபடி. அதனால் படப்பிடிப்பு செட்ஸில் இருந்தபடியும், விடுமுறை காலங்களிலும் தனது படங்கள், செல்ஃபிக்கள் முதல் பி.டி.எஸ் புகைப் படங்கள் வரை பகிர்கிறார். தற்போது வெளியிட்ட புகைப் படத்தில், இடுப்பு தெரிய ஜீன்ஸ் அணிந்திருக்கிறார். தனது தோற்றம் ஸ்லிம்மாக எவ்வளவு கச்சிதமாக இருக்கி றது என்பதை வெளிப்படுத் தும் விதமாக இப்படத்தில் போஸ் தந்திருக்கிறார்.
அத்துடன் ரசிகர்களை குறிக் கும் வகையில்'' நீங்கள் இல்லையென்றால் .... பிறகு யார். சனிக்கிழமைமூட் ' என பதிவிட்டிருக்கிறார் . இந்த பதிவை பார்த்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், கருத்துகள் பிரிவில் ஒரு இதய உணர்ச்சி எமோஜி யை வெளியிட்டு டாப்ஸியை வாழ்த்தினார்.

தடகள வீராங்கனையாக நடித்துள்ள டாப்ஸி அடுத்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி வாழ்க்கை படமான சபாஷ் மிது படத்தில் நடிக்கிறார். அதற்காக தற்போது கிரிக்கெட் விளையாட பயிற்சி எடுத்து வருகிறார்.

You'r reading ஓட்டபயிற்சி முடிந்து கிரிக்கெட்டுக்கு தாவிய டாப்ஸி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை