பிரபல ஹீரோயின்கள் தங்கள் இமேஜை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். பெரிய படங்கள், பெரிய ஹீரோக்கள் அல்லது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, காஜல் போன்ற பிரபல நடிகைகள் இதைத் தான் பின்பற்றுகின்றனர். பட வாய்ப்பில்லாவிட்டாலும் தங்களுக்கு ஏற்றது போன்ற ஹீரோ இல்லாமல் வரும் படங்களை ஏற்காமல் கெத்து காட்டுகின்றனர். இவர்களிலிருந்து ஒரு நடிகை வித்தியாசமாக தனது பாணியை கையாள்கிறார். அவர் நடிகை சாய் பல்லவி.
சாய் பல்லவி சம்பளத்துக்காகவோ, படங்களில் நடிக்கவோ ஒகே சொல்லி இருந்தால் இன்று அவர்தான் முன்னனி நடிகைகளில் முதலிடத்தில் இருந்திருப்பார். ஆனால் அவர் கதைக்கும், தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். எந்த படமாக இருந்தாலும் அதில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது அவரது கண்டிஷன். அதனால் தான் மரத்தை சுற்றி டூயட் பாடி விட்டு ஒப்புக்கு சப்பாணி வேடங்களை ஏற்பதில்லை. நல்ல கதைகள் வராவிட்டால் தன்னிடம் யாராவது இயக்குனர்கள் கதை கூறி ஒகே பெற்றிருந்தால் அந்த கதைகளை சிபாரிசு செய்து நடிக்கிறார்.
பெரிய ஹீரோவுடன் ஜோடி போட்டால் அடுத்த 5 படங்கள் தேடி வரும் என்ற பாலிசிக்கு சாய் பல்லவி விதிவிலக்காக இருக்கிறார். விரைவில் தமிழில் காமெடி நடிகர் படத்தில் நடிக்க உள்ளாராம். பல்வேறு படங்களில் ஹீரோவுக்கு துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் காளி வெங்கட். அவர் நடிக்கும் படமொன்றில் நடிக்க சாய் பல்லவி ஒகே சொல்லி இருக்கிறாராம். கதை பிடித்திருந்ததால் சாய்பல்லவி சம்மதித்திருக்கிறார். ஆனால் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று தெரிகிறது. விரைவில் இதுபற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.