Saturday, May 15, 2021

பிக்பாஸ் புகழ் ஷிவானி உடன் நடித்த நடிகர் விவகாரத்து.. மனைவியை பிரிந்தார்..

by Chandru Feb 2, 2021, 15:50 PM IST

சினிமா, டிவி நட்சத்திர ஜோடிகள் சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் என்ன காரணத்தாலோ சில ஆண்டுகளில் ஒருசிலர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். சட்டப்படி விவாகரத்து பெறுகின்றனர். டி.வியில் நடித்து தற்போது திரைப் படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன். இவர் மாயா என்ற டிவி சிரியலில் நடித்த போது அவருடன் நடித்தவர் அஸீம். பின்னர் பகல் நிலவு, பிரியமானவள், தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களில் நடித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ல் வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக பங்கேற்பதாக இருந்தார். சில நாட்கள் தனிமைப்படுத்தலிலும் இருந்தார். ஆனால் அவரால் அந்த ஷோவில் பங்கேற்க முடியவில்லை. பிக்பாஸ் 4 சீசனில் அஸிம் உடன் பகல் நிலவு சீரியலில் ஷிவானி பங்கேற்றிருந்தார். இதனால் அஸிம் எண்ட்ரி எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது.

அஸீம் ஏற்கனவே சயத் ஸோயா என்பவரை மணந்திருந்தார். தற்போது அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார். இதுகுறித்து அஸிம் தந்து சமூக வலை தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது, எல்லோருக்கும் ஹலோ. எனது விவாகரத்து பற்றித் தெளிவாக்க விரும்புகிறேன். நானும் என் மனைவியும் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்ற பிரிய முடிவு செய்தோம் அதன்படி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றோம். தயவுசெய்து இதுபற்றி தனிப்பட்ட முறையில் என்னிடம் திருமண நிலை குறித்து எந்த கேள்வியும் இனி கேட்க வேண்டாம் என்றார்,இதேபோல் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒளிப்பதிவாளராக பணி யாற்றிய ஜோமன் டி ஜான் மனைவியிடம் விவாகரத்து பெற மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளராகத் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜோனன் டி ஜான் சமீபத்தில் ஒடிடியில் வெளியான பாவ கதைகள் குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் மலையாள நடிகை ஆன் அகஸ்டின் காதலித்து வந்தார். ஆன் ஆகஸ்டின் மலையாளத்தில் அர்ஜுனன் சாக்‌ஷி, த்ரி கிங்க்ஸ், ஆர்டினரி, நீ நா ஆகிய மலையாள படங்கள் மற்றும் சோலோ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். ஜோமன் டி ஜான், ஆன் அகஸ்டின் திருமணம் 2014ம் ஆண்டு நடந்தது. நடிப்பில் பல படங் களில் முன்னேறிக்கொண்டி ருந்த ஆன் திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் மனச் சோர்வு அடைந்தார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு படங்களை மட்டுமே செய்துள்ளார். மறைந்த மலையாள நடிகர் அகஸ்டினின் மகள்தான் ஆன், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.ஜோமன், ஆன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ஜோமன், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்து,இனியும் ஆன் உடன் திருமண வாழ்கையைத் தொடர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகை ஆனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஆன் தன்னுடைய மற்றும் தனது செல்லப்பிராணிகளின் புகைப் படங்களை மட்டுமே சமீப காலமாக வெளியிட்டு வருகிறார். ஜோமன் பற்றி எதுவும் பதிவிடுவதில்லை.ஒளிப்பதிவாளர் ஜோமன் தற்போது இந்தியில் சர்க்கஸ் படத்தில் பணியாற்றி வருகிறார்.திரையுலகில் நடிகை ரேவதி ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து மணந்தார். 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் 2013ம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அதேபோல் நடிகை காவ்யா மாதவன், நிஷாக் சந்திரா என்பவரை 2009ம் ஆண்டு மணந்தார். குவைத் சென்று கணவருடன் வாழ்ந்தார், ஆனால் ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். பின்னர் அவர் 2016ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை 2வது திருமணம் செய்து கொண்டார். திலீப்பும் ஏற்கனவே மஞ்சு வாரியரை மணந்து பின்னர் அவருடன் மனக் கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தவர் ஆவார். நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து மணந்தார். 2 வருடத்தில் இவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

You'r reading பிக்பாஸ் புகழ் ஷிவானி உடன் நடித்த நடிகர் விவகாரத்து.. மனைவியை பிரிந்தார்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை