பிரபுதேவா வழியில் இயக்குனர் ஆகும் நடன இயக்குனர்.. 4 மொழி ஹிரோயின் என்ட்ரி

by Chandru, Feb 4, 2021, 15:19 PM IST

திரைப்பட சினிமா நடன மாஸ்டராக இருந்து படங்களை இயக்கிய தங்கப்பன், பிரபுதேவா , ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார், ஆகியோரை தொடர்ந்து மாஸ்டர் மஸ்தானும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 500 படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் மாஸ்டர் மஸ்தான். இவர் இயக்கும் மூன்றாவது படத் தின் பெயர்தான் " பட்டைய கிளப்பு " .படத்தைப் பற்றி மாஸ்டர் மஸ்தான் கூறியதாவது:படித்த நான்கு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பிரச்சனைகளில் முடிகிறது. ஊரில் இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் நால் வரும் கூடிப் பேசி இவர்களுக்கு முன்னால் பணம் சம்பாதித்து உதாசீனப்படுத்திய அந்த ஊருக்குள் வந்து இளைஞர்களாகிய எங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பது தான் கதைக் களம்.

இதில் உமா ராமசந்திரன் பட்டைய கிளப்புற ரோல்ல முக்கிய வேடத்தில் கலக்க போறாங்க" என்று கூறினார்.நான்கு மொழிகளில் இருந்து நால்வர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.மேலும் இதில் கேரளாவில் உள்ள கல்லூரி மாணவி சித்ரா ஒரு நாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூர் மாடல் அழகி லட்சுமி பாலா, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா . சிங்கம் புலி , இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, விஜய்கணேஷ், கிங்காங், நேகா, போண்டா மணி, வெங்கல் ராவ், சுப்பு ராஜ் இவர்களுடன் முத்தின கத்திரிக்கா, நான் பேய் பேசுறேன், வெட்டி பசங்க படங்களில் கேரக்டராகவே வாழ்ந்து அசத்திய உமா ராமச் சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் ஒரு கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது.

அடுத்த மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி பழனி, ஏற்காடு, சாலக்குடி ஆகிய இடங்களில் இடைவிடாமல் நடைபெற்று மே மாதம் திரைக்கு வர உள்ளது "பட்டைய கிளப்பு."பிறைசூடன், சினேகன், சொற்கோ, கானா தாஸ் நால்வரின் பாடல்களுக்கு தயாபிறை சூடன் இசையமைக்கிறார். ஆர். வேல் ஒளிப்பதிவு செய்ய விஜயகுமார் தயாரிப்பு நிர்வாகத்தைக் கவனிக்கிறார்.சாய்ராம் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடனப் பயிற்சியும் கொடுத்து இயக்குகிறார் மாஸ்டர் மஸ்தான்.

You'r reading பிரபுதேவா வழியில் இயக்குனர் ஆகும் நடன இயக்குனர்.. 4 மொழி ஹிரோயின் என்ட்ரி Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை