கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த 28 வயது தேசிய அங்கீகாரம்..

Advertisement

கோலிவுட்டில் நடிகைகள் அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா. திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா எனப் பிரபல ஹீரோயின்கள் எல்லோருமே 30 வயதை கடந்துவிட்டனர். இவர்களில் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருக்கிறது. மற்றவர்கள் காதல் கிசுகிசுவிலும் டேட்டிங்கிலும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் 30 வயதுக்குள் சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு 28 வயதுதான் ஆகிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த நடிகையர் திலகம் படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வெற்றிபெற்றது. வேகமாக வளர்ந்து வரும் இளம் ஹீரோயினாகவும் இருக்கிறார் கீர்த்தி அவருக்கு மற்றொரு தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்று ஆண்டு தோறும் உலகம் முழுவதும் நடிகர்களின் சம்பளத்தை ஆராய்ந்து அவர்களில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ என்று 100 பேர் பெயர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது போர்ப்ஸ் இதழ் நிறுவனம்.

தற்போது 30 வயதுக்குள் பொழுதுபோக்கு துறையில் சாதனை செய்த 30 பேர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 28 வயது சாதனையாளராக கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்திருக்கிறார். இது கீர்த்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில்,போர்ப்ஸ் 30 யு 30 பிரபலங்களில் ஒருவராக என்னைத் தேர்வு செய்திருப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். அதற்காக போர்ப்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தனக்கென ரசிகர் வட்டத்தைப் பெற்றிருக்கிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>