அயோத்திக்கு 10 ஆயிரம் கி.மீட்டர் பைக் பயணம்.. தல நடிகர் புதிய சாதனை..

தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது. அத்துடன் படம் நின்றது. ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்புக்கு அரசு அனுமதி கொடுத்ததும் பிறபடங்கள் தொடங்கிய நிலையில் வலிமை படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருப்பில் இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது அஜீத் கலந்துகொண்டு நடித்தார். இப்படத்தைச் சிவா இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ஹூமா குரோஷி நடிக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த பாலிவுட் நடிகை. மீண்டும் வலிமை படம் மூலம் தமிழில் நடிக்கிறார்.வலிமை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் அஜீத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்கு காலில் அடிபட்டது. அதற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு உடனே அந்த காட்சியை முடித்துக் கொடுத்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியது.

இந்நிலையில் அஜீத் தனது நண்பர்கள் சிலருடன் சமீபத்தில் வாரணாசி சென்றார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு சரித்திர புகழ் பெற்ற சாரநாத்துக்கு சென்றார். சென்னையிலிருந்து வாரணாசிக்கு அஜீத் தனது ரேஸ் பைக்கிலேயே சென்றார்.வாரணாசியில் தெருக்கடைகளில் நண்பர்களுடன் உணவை ருசிபார்த்தார். மாஸ்க், தொப்பி அணிந்திருந்ததால் அவரை யாரும் உடனே அடையாளம் காணவில்லை. தொப்பியைக் கழற்றியபோது கடைக்காரர் அவரை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். அஜீத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த படங்கள் நெட்டில் வெளியாகிக் கடந்த மாதம் வைரலானது. கிளீன் ஷேவ் செய்து பளிச்சென இருந்தார் அஜீத்.

தற்போது அஜீத்குமார் அயோத்தியா சென்றிருக்கிறார். சென்னையிலிருந்து சுமார் 10 ஆயிரம் கி மீட்டர் அவர் தனது பைக்கிலேயே சென்று புதிய சாதனை படைத்திருக்கிறார். ஐதராபாத், வாரணாசி, காங்டாக் மற்றும் லக்னோ வழியாக அவர் அயோத்தியை சென்றடைந்திருக்கிறார். அஜீத்தின் 10 ஆயிரம் கி. மீட்டர் பைக் பயணம் ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.அஜீத் புதிய புகைப்படம் அல்லது அவரை பற்றி தகவல் வெளியானால் உடனே அவரது ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு மெசேஜ் பகிர தொடங்குகின்றனர். ஒரு வருடமாக அப்டேட் கேட்டும் தரப்படாததால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். ஆனால் வலிமை படம் கோடை கொண்டாட்டமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :