சர்ச்சை சுசி இளைஞருடன் ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு.. லவ்வுக்கு எது கேரண்ட்டி..

Advertisement

ரேடியோ, வீடியோவில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பிரபலம் ஆனவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் தலைக்காட்டினார். பாடல்கள் பாடினார். இவரது வசீகர குரல் வளத்தில் விழுந்துகிடந்தவர்கள் ஏராளம். கடந்த 2017ம் ஆண்டு சுசித்ரா திடீரென்று சினிமா பிரபலங்களை வெளுக்கத் தொடங்கினார். சுசி லீக்ஸ் என்ற வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா கிருஷ்ணன், பாடகி சின்மயி எனப் பலரைப் பற்றி அந்தரங்க விஷயங்களைப் படங்களுடன் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திரையுலகமும் ரசிகர் பட்டாளமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதில் அவருக்கு பிரஷர் கொடுத்தவர்கள் இதுபோன்ற விஷயங்களை பொது வெளியில் பகிர வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள். இதையடுத்து அவர் தனது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்றார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்தார். இந்நிலையில் அவர் திடீரென்று சைலண்ட் ஆனார். அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு கடலில் போட்ட கல்லாக அமைதி காத்தார்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கொரோனா காலகட்டத்தில் நடந்த ஒரு பெரிய அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டு அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். கொரோனா ஊரடங்கு விதியை மீறிக் கடை திறந்து வைத்திருந்ததாக பீனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப் பட்டதற்கு எதிராக வீடியோவில் தோன்றி பேசினார். அது வைரலானது ஆனால் அதற்கு அதிகார வர்க்கத்திலிருந்து அவருக்கு மிரட்டல் வந்தது. உடனடியாக அந்த வீடியோவை நீக்கினார்.அதன் தொடர்ச்சியாகச் சுசி கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டுக்குள் வந்தார். அங்கு பாலாஜி முருகதாஸுடன் நன்கு பழகினார். 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து பின்னர் வெளியில் வந்தார்.

வெளியில் வந்த பிறகு கமல்ஹாசன் மீது புகார் கூறினார். பிக்பாஸ் ஷோவை தனது விளம்பரத்துக்காகக் கமல் பயன்படுத்துகிறார் என்று அவர் கூறியது பரபரப்பானது.தற்போது பாய்ஃபிரண்டு ஒருவருடன் செல்ஃபி போஸ் கொடுத்துப் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அந்த போட்டோ நெட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. ஆற்றங்கரை அருகில் அமர்ந்து அரசியல் பேசுகிறோம்... பிரண்ட்ஷிப் என்பது ஃபுல் பாதுகாப்பு. லவுக்கு எது கேரண்ட்டி என அந்த படத்துக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் சுசி.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>