கிரிக்கெட் வீரர்களை கீழ்த்தரமாக விமர்சித்த நடிகை.. வில்லங்க மெசேஜை டிவிட்டர் நீக்கியது..

by Chandru, Feb 5, 2021, 09:41 AM IST

மத்திய அரசு 3 விவசாய சட்டங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அதற்கு நாடு முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகத் திரண்டு போராட்டம் நடத்தினர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டிராக்டரை ஓட்டியபடி டெல்லிக்குள் முக்கிய பகுதிகளில் புகுந்தனர். இதில் கலவரம் வெடித்தது. போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் விவாசாயிகளை விரட்டியடித்தனர். விவசாயிகளும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். உயிரிழப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒன்றிரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகின ஆனாலும் பல சங்கங்கள் போராட்டத்தை தொடர்கிறது. மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.விவசாயிகள் போராட்டத்தைத் தொடக்கம் முதலே விமர்சித்து வருகின்றார் நடிகை கங்கனா ரனாவத். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. அந்த சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்றார்.விவசாயிகள் போராட்டம் குறித்து சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசு விவசாயிகளின் நன்மைக்காக வேளாண் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதை விவசாயிகள் எதிர்ப்பது சரியல்ல. வதந்திகளை விவசாயிகள் நம்ப கூடாது என்றனர். ஆனால் இது விவசாயிகள் மத்தியில் எடுபடவில்லை. அவர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக விமர்சித்து மெசேஜ் வெளியிட்டார். அவர் கூறும்போது, ஏன் எல்லா கிரிக்கெட் வீரர்களும் அரசுக்கு எதிராக போராடும் விவசாயி களை தீவிரவாதிகள் என்று சொல்ல தயங்குகிறார்கள் என்றதுடன் கிரிக்கெட் வீரர்களை நாய்கள் என்று கீழ்த்தரமாக விமர்சித்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக கங்கனாவின் இந்த மெசேஜை டிவிட்டரிலிருந்து நீக்கியது.

கங்கானா ரனாவத் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை பா ஜ கட்சியின் ஆதரவாளராகக் காட்டிக்கொள்கிறார். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அமையும்போது அதைப் பயன்படுத்தி தனது பா ஜ விசுவாசத்தைக் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கங்கான பா ஜ ஆதரவாளராக இருக்கலாம் ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை அவர் இழிவுபடுத்தக்கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில்,இந்தியா எப்போதும் வலுவானதாக உள்ளது, இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்றாக நின்று தீர்வு காண வேண்டும். நம் விவசாயிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். எல்லோரும் இந்த விஷயத்தில் தங்களது பணியை செய்து பிரச்சனைக்குத் தீர்வு காண்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

You'r reading கிரிக்கெட் வீரர்களை கீழ்த்தரமாக விமர்சித்த நடிகை.. வில்லங்க மெசேஜை டிவிட்டர் நீக்கியது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை