70 களின் மாணவர்கள் சந்திப்பு, 80களின் மாணவர்கள் சந்திப்பு அதுபோல் 80களின் நட்சத்திரங்களின் சந்திப்பு என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படங்கள் வரும் அதுபோன்ற ஒரு ஞாபகத்தைக் கொண்டு வரும் படம் என்று கூறப்பட்டாலும் வெர்ஜின் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது நானும் சிங்கிள் தான். இப்படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு நேற்று நடந்தது. படத்தை ஆர்.கோபி டைரக்டு செய்திருக்கிறார். திரி இஸ் ஏ கம்பெனி பட நிறுவனம் மற்றும் ஜெய குமார், புன்னகை பூவே நடிகை கீதா இணைந்து தயாரித்துள்ளனர். இதில் அட்டகத்து தினேஷ், தீப்தி ஜோடியாக நடித்துள்ளனர்.
நயன்தாராவைப்போல் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் ஹீரோ. ஆண்களே வேண்டாம் என்று விலகி செல்லும் ஹீரோயின் இருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.இதுபற்றி இயக்குனர் கோபி கூறியதாவது: நான் ஜீ தமிழில் வெப் சீரிஸ் செய்துவிட்டு நேரடியாகப் படம் இயக்கி இருக்கிறேன். வெர்ஜின் பசங்க என்ற சீரிஸை பார்த்துவிட்டு அதுபோல் ஒரு யூத்தான கதை வேண்டும் என்று என்னை அழைத்து வாய்ப்பு தந்தார்கள். நானும் சிங்கிள் தான் புதிய கதை. 90 களின் கிட்ஸ்களுக்கான கனவு படமாக இது உருவாகி இருக்கிறது. பல ஹீரோக்களிடம் கதை கூறினேன் அவர்கள் தயங்கினார்கள். நடிகர் தினேஷிடம் சொன்னால் அவர் புரிந்துகொள்வாரா என்ற சந்தேகத்துடன் அவரிடம் கதை கூறினேன்.
அவர் கதையில் ஒரு தவறும் இல்லையே சரியாக இருக்கிறது செய்யலாம் என்றார். அதேபோல் இதில் நடித்தவர்கள் சிங்கிளா என்று பார்த்து ஒப்பந்தம் செய்தேன். லண்டனில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நடித்திருக்கும் ஹீரோயின் தீப்தி ஆக்ஷன் காட்சியில் நடித்திருக்கிறார். கனல் கண்ணன் மாஸ்டர் அவரை ரோபில் காட்டி தந்தூரி சிக்கன்போல் தொங்க விட்டுவிட்டார். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நான் இந்த இடத்தில் டைரக்டராக நிற்கக் காரணம் எனது குருநாதர் தமிழ்தாசன். அவர் இங்கு வந்து வாழ்த்தியதும் அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன் வந்து வாழ்த்தியதும் மிகவும் சந்தோஷம். இந்த படம் 90 கிட்ஸுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் பிடிக்கும் இந்த படம் ஒப்பந்தம் ஆனபிறகு எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இந்த படம் பார்ப்பவர்களுக்கும் கல்யாணம் நடக்கும் அல்லது அதுபற்றிய புரிதலாவது கிடைக்கும்.இவ்வாறு இயக்குனர் ஆர்.கோபி பேசினார்.நிகழ்ச்சியில் கே.ராஜன், தமிழ்தாசன், படத்தில் நடித்திருக்கும் செல்வா, கிருஷ்ணா, கதிர், விகாஷ், நடிகை தீப்தி காஸ்டிங் டைரக்டர் ஸ்வப்னா, இசை அமைப்பாளர் ஹிதேஷ் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.