கிளைமாக்ஸ் பயிற்சி வகுப்பில் 2 ஹீரோக்கள்..

Advertisement

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். மேலும் இப்படத்தின் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவரும் பயிற்சியின் போது காயம் அடைந்தனர். இதனாலும் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எல்லாம் முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கி 50 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் மகாராஷ்டிரா சென்ற படக் குழு அங்குள்ள மஹா பலேஸ்வர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது. அதனை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினர்.

ஆர் ஆர் ஆர் படத்தில் இந்தி நடிகை அலியாபட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டு இருந்தது. இதற்கிடையில் இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலையின்போது அலியாபட் அவரை அவமானப்படுத்தியாக புகார் எழுந்தது. இதில் கோபம் அடைந்த ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து அவரை நீக்கும்படி குரல் எழுப்பினார். அதை ராஜமவுலி ஏற்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முன் அலியாபட் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக இருந்தது. அப்போது இப்படத்தின் டீஸரில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி வைத்து நடித்ததற்கு ஆதிவாசிகளும். பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுபோன்ற பிரச்சனையால் ஆலியாபட் படப்பிடிப்பு தள்ளிப்போனது.பிரச்சனைகள் அமைதியான சூழலில் அலியாபட் ஒருவழியாக படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத்துக்கு வந்தார். ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் ஜோடியாகச் சீதா என்ற கதாபாத்திரத்தில் அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என் டி ஆர் கோமரம் பீம் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.அலியா பட் நடித்த காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்த நிலையில் ஜனவரியில் மீ்ண்டும் ராம் சரணுடன் படமாக்கத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ராம் சரண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். 2 வார ஓய்வுக்குப் பிறகு அவர் குணம் அடைந்தார். தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாகி வருகிறது. ராஜமவுலி இரண்டு கைகள் இணைவது போன்ற படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.அவர் வெளியிட்ட மெசேஜில், கிளைமாக்ஸ் ஷூட்டிங் தொடங்கியது. ராமராஜு மற்றும் பீம் இருவரும் என்ன நினைத்தார்களோ அதை சாதிப்பதற்காக ஒன்றாக இணைகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

டபுள் ஹீரோ படங்களில் இரு ஹீரோக்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது வழக்கம் ஆனால் இப்படத்தில் இரண்டு ஹீரோக்களும் கைகோர்த்து எதிரிகளை துவம்சம் செய்வதுபோல் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.ஆர் ஆர் ஆர் படத்துக்குக் கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் தேவ்கன், அலியாபட் , ஒலிவியா மோரிஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.பிரமாண்டமாக உருவாகி வரும் கிளைமாக்ஸ் காட்சிக்கு துணை நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஹீரோக்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஷெசனில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ரிலாக்ஸாக சிரித்து பேசிக்கொண்டிருந்த படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது.ஆர் ஆர் ஆர் படம் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசரா கொண்டாட்டமாகத் திரைக்கு வரவுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>