தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தளித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் நிறுவனர் ஆர்.பி.சவுத்ரி தற்போது தெலுங்கு படங்களும் தயாரித்து வருகிறார். தமிழில் விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நாட்டாமை சூர்யவம்சம், எழில் இயக்கத்தில் லவ் டுடே எனப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்தளித்தவர் ஆர்.பி.சுவுத்ரி. தற்போது தனது 90 வது படமாகக் களத்தில் சந்திப்போம் படத்தை தயாரித்துள்ளார். இதில் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை என்.ராஜசேகர் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படம் நேற்றுமுதல் திரை அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை உள்ள லீ மேஜிக் லேடர்ன் ப்ரிவியூ தியேட்டரில் களத்தில் சந்திப்போம் படத் தின் சிறப்பு காட்சி பத்திரிகை மற்றும் மீடியாவுக் காக திரை யிடப் பட்டது. அப்போது நடந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரிக்கு பாராட்டு விழா நடந்தது.பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் கலந்து கொண்டு சவுத்ரியை வாழ்த்தி பேசினார். அவர் கூறும் போது, இன்றைக்கு நான் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக உங்கள் முன் இருக்கிறே னென்றால் அதற்கு காரணம் ஆர்.பி.சுவுத்ரி சார்தான், அவரிடம்தான் நான் தயாரிப்பு பற்றியும் கற்றுக் கொண்டேன், அவர் 60 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்து இயக்குனர்களாக்கி இருக்கிறார்.
இன்றைக்குக் களத்தில் சந்திப்போம் அவரது 90வது படமாகத் தயாராகி இருக்கிறது. விரைவில் 100 படங்கள் தயாரித்துவிடுவார். அப்போது அவருக்குப் பெரிய பாராட்டு விழா நடத்த உள்ளேன். 100 படங்களுக்கு மேலும் அவர் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் அவரது பிள்ளைகளும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும் என்றார்.பிறகு ஆர்.பி.சவுத்ரி பேசும் போது,அந்த காலகட்டத்தில் பெரிய ஹீரோக்கள் வருடத்துக்கு மூன்று நான்கு படங்கள் நடித்தார்கள். இப்போது அவர்களது இமேஜ் கதையைப் பொருந்து வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். இதனால் பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பது எளிதானதல்ல என்றாகி விட்டது. தற்போது 90 படம் முடிந்திருக்கிறது அடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறது. 100 படங்கள் தயாரிப்பது உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் நடக்கும். சிரஞ்சீவி நடிக்கும் படம் தயாரிக்கிறேன். மலையாளத்திலிருந்து ரீ மேக் ஆகிறது. இதை இயக்குனர் மோகன்ராஜா இயக்குகிறார். இது தெலுங்கில் மட்டுமல்ல தமிழில் வரும். சூப்பர் குட் பிலிம்ஸ் படமென்றாலே குடும்ப பாங்கான படமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். முன்பெல்லாம் எங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது முதல் நாள் குறைவாக ரசிகர்கள் வருவார்கள்.
பிறகு மவுத் டாக்பரவி ஒருவாரத்துக்கு பிறகுதான் ஹவுஸ்புல்லாகி வெற்றி பெறும். 100 நாட்கள் ஓடி வெற்றி பெறும். இப்போது 3 நாளைக்குள் படத்துக்குக் கூட்டம் வராவிட்டால் தியேட்டரிலிருந்து படத்தை எடுத்து விடுவார்கள். அதனால் படம் தயாரிப்பதைக் குறைத்துக் கொண்டேன் என்றார்.நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஸ்தான பி ஆர் ஓவாக பணியாற்றிய மவுனம் ரவிக்கும் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் நிலை விரைந்து குணம் அடைய வாழ்த்துக் கூறினார்கள். பி ஆர் ஓ டைமண்ட் பாபு சூப்பர் குட் பிலிம்ஸின் முதல் படத்துக்கு அவரது தந்தை பிலின் நியூஸ் ஆனந்தன் பி ஆர் ஓவாக பணியாற்றினார். அதை நினைவுகூர்ந்து சவுத்ரிக்குப் பொன்னாடை அணிவித்தார். தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கவிதா மற்றும் நிர்வாகிகள் சவுத்ரிக்கு பொன்னாடை அணிவித்தனர். அனைவரையும் பி ஆர் ஒ ரியாஸ் அகமது வரவேற்றார்.