கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமான ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் இன்னொரு வடிவம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அப்போதைய சேமிப்பளவான 64 ஜிபி தற்போது 128 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்திலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் தற்போது விற்பனையாகிறது.
ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+; 1600X720 பிக்ஸல் தரம்
ரெஃப்ரஷ் விகிதம்: 60 Hz
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு:128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல் (ஏஐ பியூட்டி சப்போர்ட்)
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி35
இயங்குதளம்: கலர் ஓஎஸ் 7.2; ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4100 mAh
எடை: 175 கிராம்
கலர் ஃபில்டர், பனோரமா மற்றும் டைம்-லாப்ஸ் மோடுகள் இதன் காமிராக்களில் உண்டு. ஆப்போ ஏ15எஸ் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,490/- ஆகும்.