நெட்டில் திடீரென வைரலாகும் பாகுபலி குழந்தை படம்..

கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரானா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பிரபாஸ் குழந்தையாகப் பிறக்கும் நிலையில் இருந்து காட்சிகள் இடம் பெற்றிருக்கும். பிறந்த குழந்தையைக் கொல்வதற்காக ரானாவின் ஆட்கள் வர அந்த குழந்தையை ரம்யா கிருஷ்ணன் தூக்கிக் கொண்டு அரண்மனையின் ரகசிய வழியாகத் தப்பித்துச் செல்வார். காட்டாற்றில் அவர் சிக்கிக் கொண்டாலும் அந்த குழந்தையை மட்டும் தனது கரங்களைத் தண்ணீருக்குமேல் தூக்கி வைத்துக் காப்பாற்றுவார்.

அதே போல் அந்த குழந்தையை முன்னதாக சத்யராஜ் கையில் ஏந்தி கொஞ்சுவார். இந்த இரண்டு காட்சிகளும் படத்தில் முக்கிய காட்சியாக அமைந்ததுடன் எல்லா போஸ்டர்களிலும் இடம் பிடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களும்தான் நெட்டில் திடீரென வைரலாகி வருகிறது.பிரபாஸின் குழந்தை பருவத்தில் கைக்குழந்தையாக நடித்தது தன்வி என்ற குழந்தை தற்போது அந்த குழந்தைக்கு 6 வயது ஆகிறது. அக்குழந்தையை வைத்துக்கொண்டு அவரது தந்தை அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிறந்த உடனே நடித்த குழந்தைக்குப் பலரும் வாழ்த்து பகிர்வதுடன் எதிர்காலத்தில் நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்து பகிர்கின்றனர்.பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்து 5 வருடத்துக்குமேல் ஆகிவிட்ட நிலையிலும் இன்றும் அப்படம் பற்றிய தகவல் ஏதாவது ஒரு வழியில் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு வெற்றிப் படத்துக்காக பிரபாஸ் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர். தற்போது சலார், ராதே ஷ்யாம் ஆதிபுருஷ் ஆகிய பிரமாண்ட படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :