பிரபல தமிழ் நடிகை போலீஸ் கமிஷனரிடம் புகார்.. மிரட்டல் - ஆபாச விமர்சனம்..

Advertisement

பெரும்பாலான நடிகைகள் இணையதளத்தில் தங்களது அன்றாட செயல்பாடுகளை பதிவு செய்கின்றனர். பல நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிட்டு தங்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். அரசியல் சார்ந்த நடிகைகள் சர்ச்சை கருத்துக்கள் பகிர்கின்றனர். கங்கனா ரனாவதத் பெரும்பாலும் சர்ச்சை கருத்துக்கள் பகிர்கிறார். பாஜ ஆதரவாளரான இவர் எதிர் கட்சியினரையும், பிற மதத்தினரையும் விமர்சிப்பது, கலவரத்தை தூண்டும் விதத்தில் கருத்து சொல்வது என மெசேஜ் வெளியிடுகிறார். சமீபத்தில் கூட விவசாயிகள் போரட்டத்துக்கு எதிராக மெசேஜ் வெளியிட்டு அரசை எதிர்த்து போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றார். அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் கோழைகள் அவர்கள் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்ல தயங்குகிறார்கள் என்றார்.

சர்ச்சை கருத்து கூறியதாக அவரது டிவிட்டர் மெஜேசை டிவிட்டர் நிறுவனமே நீக்கியது. இது தவிர அவர் மீது அவதூறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த பாணியில் தற்போது தமிழ், தெலுங்கு நடிகை ஒருவர் மெல்ல தனது சர்ச்சை போக்கை தொடங்கி இருக்கிறார். தமிழில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். பாஜ காட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அடிக்கடி பொது வெளியில் கருத்து சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் போலீஸில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் ஆந்திராவில் கோவில்கள் சிதைக்கப்படுகின்றன என்று தான் சொன்ன கருத்துக்கு என்னை தர குறைவாக ஆபாசமாக விமர்சித்து மெஜேச் வெளியிடுகிறார்கள், மிரட்டல்களும் வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்ஜனரை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் சைபர் கிரைம் பிரிவுக்கு அதனை அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மாதவி லதாவின் இந்த செயலை சிலர் விமர்சித்தனர். அவர் தனது பப்ளிசிட்டிக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றனர். அதற்கு பதில் அளித்த மாதவி லதா பப்ளிசிட் எனக்கு தேவை அதில் என்ன தவறு என்று பதில் அளித்தார். அவர் கூறும்போது, எனக்கு பப்ளி சிட்டியில் விருப்பம் அதிகம் தான். நான் அதை மறுக்க வில்லை. நான் விளம்பரம் தேடுகிறேன். ஊடக தலைப்புச் செய்திகளில் எனது செயல்பாடுகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு புதிய திரைப்படம் எதுவும் நடிக்க வாய்ப்பு வருவதில்லை. அதனால்தான் பப்ளிசிட்டி செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறேன் நான் தொண்டு மற்றும் சமூகப் பணிகளைச் செய்யும்போது கூட, அந்த நடவடிக்கைகளுக்கு ஊடகங்களில் நல்ல பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் மற்றவர்களும் அதைப்பார்த்து உதவ முன்வருவார்கள். பப்ளிசிட்டி தேடுவதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>