பக்கத்து வீட்டு பெண்ணும் வலுவான பெண்ணும் நான்தான்.. மஞ்சுமா மோகன் தகவல்..

Advertisement

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன், அழகிய நடிப்பில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான “களத்தில் சந்திப்போம்” படத்தில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருவதில் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார் மஞ்சிமா மோகன். இது குறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது: என்னிடம் களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாபாத்திரம் நன்றாக வருமென்கிற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது.

தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்நேரத்தில் என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் ஆர்.பி/ சவுத்ரி சாருக்கும், நடிகர் ஜீவா, இயக்குநர் என். ராஜசேகருக்கும் பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இப்படத்தில் பங்குகொண்ட நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன் மற்றும் என் மீது அன்பாக இருந்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் படத்தை மிகவும் மேம்பட்ட நிலைக்கு எடுத்து சென்று, மிக அழகான படமாக்கியுள்ளார்கள்.

இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறியவர் எஃப் ஐ ஆர் படத்தில் தந்து கதாபாத்திரம்பற்றி கூறினார் அப்போது,களத்தில் சந்திப்போம் பக்கத்து வீட்டு பெண் போன்ற பாத்திரம் ஆனால் எஃப் ஐ ஆர் படத்தில் வித்தியாசமானதாக இருக்கும். அது ரொம்பவும் வலுவான பாத்திரம் ஏற்றிக்ருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண்ணும், நாந்தான் வலுவான பெண்ணும் நான்தான் என்றார். மஞ்சிமா மோகன் தற்போது Zam Zam (Queen படத்தின் அதிகாரப்பூர்வ மலையாள ரீமேக்), விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப் ஐ ஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>