நீச்சல் உடையில் இளம் நடிகை நடமாட்டம்..

Advertisement

கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் சுமார் 8 மாதம் முடங்கிக் கிடந்த நட்சத்திரங்களின் வாழ்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. காஜல் அகர்வால், மியா ஜார்ஜ், நிஹாரிகா, பிராச்சி தெஹ லான், ரானா, நிதின், ஆரவ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் திருமணப் பந்தத்தில் இணைந்தனர். ரிஷிகபூர், இர்பான் கான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஷாந்த் சிங் ராஜ் புத், சிரஞ்சீவி சார்ஜா, வடிவேல் பாலாஜி, தவசி போன்றவர்கள் மரணம் அடைந்தனர். அமிதாப்பச்சன் முதல் சூர்யா வரை கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்.

நடிகைகள் கங்கனா ரனாவத், அலியாபட், ரகுல் ப்ரித் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ரியா சக்ரபோர்த்தி போன்றவர்கள் போதை வழக்குகளில் சிக்கினர்,ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெங்களூரில் போதை மருத்து வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் சிங் வழக்கில் போதை மருந்து விவகாரத்தில் மும்பையில் சிறை சென்றார். மூவருமே ஜாமினில் வெளியில் வந்தனர்.நடிகை அலியாபட் சுஷாந்த் சிங்கை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி சுஷாந்த் ரசிகர்களால் ஏகத்துக்கு ஏச்சும் பேச்சும் சந்தித்தார். அவரை ராஜமவுலி யின் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து நீக்கவும் ரசிகர்கள் வற்புறுத்தினர்.

இந்நிலையில் அலியாபட், இந்தி நடிகர் ரன்பீர் கபூர் காதல் விவகாரம் அம்பலமானது. இரு குடும்பத்தினரும் அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இருவரும் டேட்டிங் பயணமாக மாலத்தீவு சென்று பொழுதைக் கழித்தனர், பின்னர் அங்கிருந்து திரும்பினர். அலியாபட் இயக்குனர் ராமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். பிறகு இந்தி படப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் அலியாபட். கடற்கரையில் அவர் அமர்ந்து ரிலாக்ஸ் செய்திருக்கும் அந்த புகைப் படங்கள் வெளியானவுடன் அதற்கு 1 மில்லியன் லைக்ஸ் குவிந்தது. ஆயிரக்கணக்கில் பாராட்டு கமெண்ட் பகிர்ந்தனர். நீச்சல் உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை அலைபாய விட்ட அலியாபட் எந்த இடத்திலிருந்து இந்த கவர்ச்சி விடுமுறை சுற்றுலாவை அனுபவிக்கிறார் என்று இடத்தை குறிப்பிடவில்லை.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>