நடிகை ஸ்ருதிஹாசன் புதிய பாய்ஃபிரண்டுடன் டேட்டிங்.. இருவருக்கும் என்ன உறவு?

Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் திரைப் படங்களில் பிஸியாக நடித்த வந்த நிலையில் திடீரென்று 2018-19ம் ஆண்டுகளில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடைசியாக 2017ம் ஆண்டு சூர்யாவுடன் சிங்கம் 3 (எஸ்3) படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் சுந்தர்.சி இயக்கவிருந்த சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். திடீரென்று படக் குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார்.

அதன்பிறகு லண்டன் பாய்ஃபிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் டேட்டிங் செய்தார். வருடக் கணக்கில் அவர்களின் டேட்டிங் தொடர்ந்தது. தனது தந்தை கமல்ஹாசனுக்கு பாய்ஃபிரண்டை ஸ்ருதி அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு கமல்ஹாசன் லண்டன் சென்று மைக்கேல் குடும்பத்தினருடன் பேசினார். ஸ்ருதி- மைக்கேல் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணியபோது திடீரென்று அவர்கள் காதல் முடிவுக்கு வந்தது, பாய்ஃபிரண்டுடனான காதலை ஸ்ருதி பிரேக் அப் செய்துகொண்டார்.

கொரோனா காலகட்டத்தில் மும்பையில் தனது தனிமை பொழுதைக் கழித்தார் ஸ்ருதி. 8 மாதங்களுக்குப் பிறகு லாபம் படப்பிடிலிருந்து அழைப்பு வரவே அதில் பங்கேற்று நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். ரவி தேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் விரைவில் தமிழில் திரைக்கு வரவுள்ளது.ஸ்ருதிஹாசன் தற்போது புதிய பாய்ஃபிரண்டுடன் பழகி வருகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளன்று அவர் வாழ்த்துக் கூறினார். ஸ்ருதியும் தனக்கு புதிய காதல் மலர்ந்திருப்பதாகச் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.ஸ்ருதியின் புதிய பாய்ஃபிரண்ட் பெயர் சாந்தனு ஹாசரிகா. இவர் அசாம் மாநிலம் கவுஹாத்தியை சேர்ந்தவர். ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட். தங்கள் இருவருக்குமான நட்பு பற்றி சாந்தனு ஹசாரிகா தெரிவித்தார்.

அவர் கூறும்போது,எங்கள் இருவரை ஒன்றிணைத்தது கலைதான். கலை தொடர்பாக இருவரும் சந்தித்தோம். எனக்கும் ஸ்ருதியை போலவே கலை மற்றும் இசையில் ஆர்வம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இருவரது ரசனையும் ஒன்று தான். அவர் எழுதிய அழகான கவிதை ஒன்றுக்கு நான் படமும், விஷுவலும் செய்து கொடுத்தேன். இதுதான் அதிகாரப்பூர்வமில்லாத எங்கள் கூட்டணி பணி. எங்கள் இருவருக்கும் வலுவான ஓவியபந்தம் இருக்கிறது. ஆக்கப்பூர்வமான திட்டங்களில் இருவரும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு சாந்தனு ஹசாரிகா குறிப்பிட்டார். ஆனால் இருவருக்கும் காதல் உறவு உண்டா? இல்லையா? என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனாலும் இருவரும் ஜோடியாக ஆங்காங்கே தென்படுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>