நடிகைகள் அசின், ஜெனிலியா, நஸ்ரியா நாசிம், பாவனா, நவ்யா நாயர், ஸ்ரேயா, எமி ஜாக்ஸன், சமந்தா, பிரியாமணி போன்றவர்கள் வரிசையில் திருமணம் ஆனவர்கள் பட்டியலில் இணைந்தார் காஜல் அகர்வால். சில ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வந்தனர். ஒரு மொழியில் படங்கள் இல்லாத நிலையிலும் வேறு மொழியில் வாய்ப்பு பெற்று வந்தனர். இதெல்லாமே அவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பு இருந்தநிலை, திருமணம் முடிந்தவுடன் அவர்களிடம் கால்ஷீட்டுக்காக சுற்றி வந்த தயாரிப்பாளர்கள் மாயமாகி விட்டனர். அசின், நஸ்ரியா கவுரவமாக நடிப்பிலிருந்து விலகினர். மற்றவர்கள் வாய்ப்பு வந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு காஜல் நிலைமையும் இப்படி ஆகி இருக்கிறது.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என இரண்டு படங்களில் நடித்து வந்த காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு கமலுடன் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் முடங்கியது. இந்நிலையில் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை கடந்த ஆண்டில் மணந்தார் காஜல் அகர்வால். முன்னதாக அவரிடம் திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா என்றதற்கு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க கட்டுப்பாடு எதுவும் விதிக்க மாட்டேன் என்றார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்பு தேடி வரவில்லை. ஏற்கனவே பேச்சு வார்த்தையில் இருந்த ஓரிரூ பட வாய்ப்புகள் மட்டுமே அவரால் தக்க வைக்க முடிந்தது. தற்போது காஜல் தனது பெயரில் மாற்றம் செய்திருக்கிறார். வழக்கமாக காஜல் அகர்வால் என்று பயன்படுத்தி வந்தவர் திருமணத்துக்கு பிறகும் ஓரிரு மாதம் அதையே பின்பற்றினார்.
தற்போது தனது பெயருக்கு பின்னால் இருந்த அகர்வால் பெயருக்கு பதிலாக ஏ கிட்ச்லு என கணவரின் பாதி பெயரை சேர்த்துக்கொண்டிருக்கிறார். இனிமே காஜல் அகர்வால் காஜல் ஏ கிட்ச்லு ஆகிவிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புதிய பெயரை சேர்த்திருக்கிறார். கணவர் பெயரை தன் பெயருடன் சேர்ப்பதற்காக சேர்த்தாரா அல்லது ராசிக்காக சேர்த்தாரா என்று சிலர் கமெண்ட் பகிர்ந்துவருகின்றனர். இந்நிலையில் காஜல் தனது கணவரின் இண்டீரியர் டிசைனிங் நிறுவனத்தில் பார்ட்னர் ஆகி இருக்கிறார். சினிமா வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறார். வெட்டிங் வாவுஸ் இதழின் அட்டை படத்துக்கு போஸ் தந்திருக்கும் காஜல் அந்த புத்தகத்தின் அட்டை படத்திலும் தனது புதுபெயரான காஜல் கிட்ச்லு என்பதை சேர்த்திருக்கிறார்.