சொந்த குரலில் டப்பிங் பேசிய புட்ட பொம்மா நடிகை..

Advertisement

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அன்று தனது அடையாளத்தை பதிக்க முடியாமல் சென்றவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த அல வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு அல்லுவுடன் அவர் ஆடிய நடனம் அவரை பேச வைத்ததுடன் முன்னணி நடிகைகள் வரிசையில் அவரை கொண்டு நிறுத்தி இருக்கிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை பிரபாஸ் நடிக்கும் பூஜா ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் ஷூட்டிங்கிற்காக தங்கி இருந்தார் பூஜா. அதன் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு மும்பை சென்றார். வீட்டில் சில நாட்கள் ஒய்வில் இருந்தவர் பிறகு சர்க்கஸ் இந்தி பட படப்பிடிப்பில் பங்கேற்றார். அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

ரோஹித் ஷெட்டி இயக்கும் சர்க்கஸ், 1982ம் ஆண்டு சஞ்சீவ் குமார், மவுசுமி சாட்டர்ஜி மற்றும் தேவன் வர்மா நடிப்பில் வெளியான அங்கூர் நகைச்சுவை கிளாசிக் படத்தின் ரீமேக் என்று வதந்தி பரவியது. ஆனால் அதனை இயக்குனர் மறுத்தார். சர்க்கஸ் படத்தில் ரன்வீர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த்த ஜாதவ், ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா, சுராஜேஷ் ஹிர்ஜி, விஜய் பட்கர், சுல்பா ஆர்யா, முகேஷ் திவாரி, அனில் சரஞ்சீத் மற்றும் அஸ்வினி கல்சேகர் போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். நடிகர் சல்மான் கானுடன் கபி ஈத் கபி தீபாவளி மற்றும் அகில் அக்கினேனியுடன் மோஸ்ட் எளிஜிபில் பேசுவலர் ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே தான் நடித்த படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபாஸுடன் பூஜா ஜோடியாக நடிக்கும் படம் ராதே ஷ்யாம். இந்த படத்திற்காக அவர் தெலுங்கில் டப்பிங் பேசினார். தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்பு வருவதால் தெலுங்கு பேச கற்றுக் கொண்டார் பூஜா ஹெக்டே. தற்போது சரளமாக பேசுவதால் அவர் நடித்த காட்சிகளுக்கு அவரே டப்பிங் பேசி முடித்தார். இந்தியிலும் அவரே டப்பிங் பேசுவார். ராதே ஷியாம் ஐரோப்பாவில் நடக்கும் கவித்துவமான ஒரு காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீஸருக்காக பிரபாஸின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டீஸருக்காகத் தான் பூஜா ஹெக்டே டப்பிங் பேசினார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும். இந்த எல்லா மொழிகளிலும் டீஸர் வெளியிடப்படும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>