நடிகை ஹன்சிகாவை எங்கே காணோம்? இதோ இங்க இருக்கேன்..

Advertisement

கடந்த 2011ம் ஆண்டு தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் என்ட்ரி கொடுத்த ஹான்சிகா மோத்வானி அடுத்த ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். குஷ்பு மாதிரியே சாயல் கொண்டிருந்ததால் சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் அவரை அழைத்தனர். விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆர்யாவுடன் சேட்டை, கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம் 2 என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டி வந்தவருக்கு கடந்த 2 வருடமாக தமிழில் மார்க்கெட் டல்லடித்தது. தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளில் கவனத்தை திருப்பியதும், கோலிவுட்டில் கவனத்தை குறைத்துக்கொண்டதும் அவர் பட வாய்ப்புகள் பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. கடைசியாக அவர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு 100 என்ற படம் வந்தது. கடந்த ஆண்டில் ஒருபடமும் ரிலீஸ் ஆகவில்லை.

ஹன்சிகா மலைபோல் நம்பி இருக்கும் படம் மஹா இது அவரது 50வது படமாக உருவாகி வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக சிம்பு நடித்துள்ளார். யூ. ஆர். ஜமீல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹன்சிகா காவி உடை அணிந்து சுருட்டு புகைப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு அந்த சலசலப்பு அடங்கியது. ஒன்றிரண்டு வருடமாக ஹன்சிகா பற்றிய பேச்சு குறைந்திருக்கும் நிலையில் எங்கே ஹன்சிகாவை காணோம் என்று ரசிகர்கள் கேட்டநிலையில் இதோ இங்க இருக்கேன் என்பது போல் குரல் கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. பிரபல பாடகர் ஒருவரின் இசை ஆல்பத்திற்காக நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரபல இசைப்பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள பூட்டி ஷேக் (Booty Shake)ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் அவரது 50வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார். டோனி கக்கார் ( Tony Kakkar ) இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை சாட்டி தில்லான் (Satti Dhillon) இயக்கியுள்ளார். இது குறித்து ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது: இசைத் துறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுவதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள பெரும் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>