பரியேறும் பெருமாள் பட பாடகருக்கு கலெக்டர் உதவி..

by Chandru, Feb 10, 2021, 10:57 AM IST

பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர். அவர் நெல்லையில் மழைக்கு ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவருக்கு உதவும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உதவி பெற்றுத்தந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: தமுஎகச மாநிலக்குழு சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசுக்கு (பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தவர்)நாட்டுப்புற கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்து அதை அவருக்குத் தெரிவிக்கச் சென்றபோது அவர் வறுமையில் குடிசை வீடு ஒன்றில் வசிப்பது தெரியவந்தது.

தெரிந்தவுடன் தமுஎகச மாநிலக் குழுவினர் ஆர்.நரும்பு நாதன் (R Narumpu Nathan) உள்ளிட்டவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு விவரத்தை கொண்டு சென்றனர். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த அடிப்படையில் நேற்று உதவிகள் வழங்கப்பட்டது. தங்கராசுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தர முன் வந்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு. அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

சம்பளம் ரூ 10,000/- ( தற்போது வெளியூரில் ஒரு தனியார் பள்ளியில் 2500/- சம்பளத்தில் அவர் பணி புரிகிறார்) நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000 பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். அவரது வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு ஏதேனும் நிதியுதவியை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 68,000 நிதி சேர்ந்துள்ளது. நேற்று மாவட்ட ஆட்சியர் 70,000 ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார். தமுஎகச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது.

You'r reading பரியேறும் பெருமாள் பட பாடகருக்கு கலெக்டர் உதவி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை