இந்தி இசை ஆல்பத்தில் ஆட்டம் போடும் ராஷ்மிகா..

Advertisement

பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். கோலிவுட்டை ஓரம்கட்டி விட்டு பாலிவுட்டில் நடிக்கச் சென்று சரியான வாய்ப்பு இல்லாமல் மீண்டும் கோலிவுட், டோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.பாலிவுட்டில் சாதிக்கலாம் என்று சென்ற இலியானா, கண்ணடி நடிகை ப்ரியா வாரியரும் வாய்ப்பில்லாமல் டல்லடித்துப்போயிருக்கின்றனர். அதேபோல் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் இந்தி பட ஆசையில் நடிக்கச் சென்று உடல் இளைத்துத் திரும்பியதுதான் மிச்சம். அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் ஒரு குழந்தையின் தாயாக நடிக்கும் அளவுக்கு அவருக்குத் தோற்றம் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர்.இந்நிலையில் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துக்கொண்டு வளர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தனது அடுத்த கட்ட முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற தெலுங்கு படங்களில் விஜய தேவர கொண்டாவுடன் நடித்து பிரபலம் ஆன ராஷ்மிகா அடுத்து அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். மற்றொரு தமிழ்ப் படத்திலும் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நிலையில் தற்போது இந்தி பட ஆசையில் இருக்கிறார். மிஷன் மஜ்னு என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பாகிஸ்தானில் புகுந்து இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் பற்றிய கதையாக இது உருவாகிறது.காதல் கதைக்களமாக அல்லாமல் மாறுபட்ட கதையை ராஷ்மிகா இந்தியில் அறிமுக படமாகத் தேர்வு செய்திருக்கிறார். அவரது முயற்சி எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் ராஷ்மிகா நடித்துள்ள இந்தி முதல் சிங்கிள் இசை ஆல்பம் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பதுடன் நடனம் ஆடி இருக்கிறார்.

இதில் பிரபல நடனக் கலைஞர்கள் பாட்ஷா, உச்னா அமித், ஜொனிதா காந்தி பங்கேற்றுள்ளனர். இதில் ராஷ்மிகா பல வித காஸ்டியூம் கள் அணிந்து அவர்களுடன் நடனம் ஆடி இருக்கிறார். இந்தி ஆல்பமாக இருந்த போதும் அதில் தமிழ்ப் பாடல் வரிகளும் இடம் பெற்றுள்ளது. அமர்பிரீத் இயக்கி உள்ளார். சுமீத் சிங் தயாரித்திருக்கிறார். ரிட்சி பர்ட்டன் நடனம் அமைத்திருக்கிறார்.மிஷன் மஜ்னு இந்தி படத்தில் நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கூடுதல் ஆதரவாகத் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் புஷ்பா படமும் இந்தியில் வெளியாக உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>