ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களூரூ போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் நடிகை சஞ்சனா கல்ராணியும் போதை மருந்து தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டதில் சில விஷயங்களில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இதில் சஞ்சனாவுக்கு முதலில் ஜாமீன் கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகே ராகினிக்கு ஜாமீன் கிடைத்தது.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் ராகினி திவேதி இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது தான் அனுபவித்த போராட்டத்தைப் பற்றி வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு அழுதார்.அவர் கூறும்போது.சமையல் மற்றும் வேடிக்கையான வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் நான் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன். எனது போராட்டத்தைப் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். சோஷியல் மீடியாவில் சிலரின் கருத்துக்களால் நான் காயம் அடைந்தேன்.என்னைப்பற்றி அல்லது என் குடும்பத்தின் மீது மலிவான கருத்துக்களை அனுப்புவதன் மூலம் ஒருவருக்கு என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் கூட, நான் அதை சவாலாக எடுத்துக்கொண்டு முன்னேறுகிறேன்.
நிச்சயமாக நான் அவர்களிடம் திரும்பிச் சென்று அவர்களின் கருத்துகளைப் படிக்கச் சொல்ல விரும்புகிறேன். யாராவது குடும்ப உறுப்பினர்கள் மீது மலிவான கருத்துக்களை அனுப்பியிருந்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள்.நடந்த நிகழ்வுகள் பற்றி யோசித்தால் என்னால் இன்னும் தூங்கக் கூட முடியவில்லை. நான் பலமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்களே உங்களை ஒருபோதும் கடிந்து கொள்ளாதீர்கள். உங்கள் அடையாளத்தைப் எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள்.இவ்வாறு ராகினி திவேதி கூறினார்.