சமூக ஊடகங்களில் சினிமா நடசத்திரங்கள் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர். இதில் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. தங்களை பற்றிய விவரங்களை வெகு எளிதாக அதில் நட்சத்திரங்கள் பகிர்ந்து விளம்பரம் பெறுகின்றனர். அதேசமயம் நேரடியாக ரசிகர்கள் தொடர்பு கொள்ளும் நிலையால் சில சமயம் அவர்களின் கிண்டல், கேலி, திட்டுக்குள்ளாகின்றனர். ரஜியுடன் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர். தினமும் மெசேஜ் பகிர்ந்து தனது கருத்து வெளிப்படுத்துவதுடன் ஒரு சில நியாயமான போரட்டங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கிறார். இது சில சமயம் அவரை சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது. பத்மாவத் இந்தி படத்தில் நடித்தபோது சில அமைப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
அதேபோல் டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அப்போதும் எதிர் அணியின ரிடம் கடுமையான விமர்சனங்கள் எதிர்கொண்டார். நெட்டீஸன் ஒருவர் தீபிகா படுகோனை கடுமையான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்த்தைகள் தீபிகா மனதை பாதித்தது. அதற்கு பதிலடி தந்த தீபிகா வாவ், உன் குடும்பமும், உன் நண்பர்களும் உன்னை நினைத்து பெருமைகொள்வார்கள் என்று வஞ்சக புகழ்ச்சியில் பதில் அளித்தார். பின்னர் அந்த பதிலை அவர் நீக்கினார். ஆனாலும் அதற்கு முன்னதாகவே பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து அதை நெட்டில் பகிர்ந்து வருகின்றனர். நடிகைகளிடம் சமூக வலைதளங்களில் நெட்டிஸன்கள் வம்பிழுப்பது மற்றும் அவர்களை அவமானப்படுத்துவது பற்றி தீபிகாவிடம் கேட்ட போது பதில் அளித்தார். அவர் கூரும்போது,எனக்கும் அப்படி நடக்கிறது.
நான் அதுபோன்ற எதிர்மறை மெசேஜ்களை எடுத்துக் கொண்டு பதில் அளிப்பதில்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. சமூக ஊடகங்களில் நேர்மையாக இருங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உண்மையாக இருங்கள். மேலும் ஒவ்வொரு உரையாடலுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். தீபிகா இந்த ஆண்டில் கைநிறைய படங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். ஷாகுன் பாத்ராவின் பெயரிடப்படாத அடுத்த படத்தில் நடிக்கிறார். இதில் அன்டோனியா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் அவருடன் நடிக்கின்றனர். ஷாருக்கானுடன் மீண்டும் பதான் புதிய படத்தில் இணைகிறார். நாக் அஸ்வின் பன்மொழி படத்திலும் பிரபாஸுடன் இணைந்து நடிக்க உள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து ஃபைட்டர், மேலும் திரவுபதியாக மகாபாரதம் படத்திலும் நடிக்கிறார்.