சினிமாவில் எதிர்பராதது நடப்பது என்பது சகஜமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திர காதல், கல்யாணம் போன்றவை சில சமயம் ஷாக் தருகிறது. தனக்கு காதலனே இல்லை, திருமணம் 2 வருடம் கழித்துத்தான் நடக்கும் என்று கூறி வந்த நடிகை காஜல் அகர்வாலின் குட்டு லாக்டவுனில் அம்பலமானது. குடும்பத்தினர் அவரை திருமணத்துக்கு வற்புறுத்தியதும் தனது காதலன் கவுதம் கிட்ச்லு பற்றிய தகவலை வெளிப்படுத்தி கடைசியில் அவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் படங்களில் வளரும் நடிகையாக இருக்கிறார் கயல் ஆனந்தி. பரியேறும் பெரிமாள் படத்துக்கு பிறகு அவர் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று ரசிகர்களும், திரையுலகினரும் கருதி வந்த நிலையில் சமீபத்தில் தனது காதலனும் திரைப்பட உதவி இயக்குனருமான சாக்ரடீஸை மணந்தார்.
இப்படி எதிர்ப்பாராத சர்ப்ரைஸ் தருவதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நெட்டில் வலம் வரும் தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. நடிகை கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிக்கின்றனர். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்தகட்டமாக திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். நடிக்க வந்த சில வருடங்களிலேயே நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை பட்டத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். விஜய், விஷால் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் தெலுங்கிலும் முன்னனி ஹீரோக்கள் ஜோடியாக நடிக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் மகளாக அண்ணத்த படத்தில் நடிக்கிறார். இசை அமைப்பாளர் அனிரூத் கோலிவுட்டில் பிரபல இசை அமைப்பாளர் ஆவார். மேலும் ரஜினிகாந்த்தின் உறவினர், கீர்த்தி அனிருத் இருவரும் தங்களைப்பற்றி வந்திருக்கும் கிசுகசுவுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷை பொறுத்த வரை கடந்த ஆண்டு அவரது திருமண கிசி கிசு வெளியானது. அப்போது பா ஜ தலைவர் ஒருவரின் மகனை மணக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கீர்த்தியின் குடும்பத்தினர் மறுத்தனர். அதேபோல் அனிருத் பற்றியும் கிசு கிசு வெளியானது, நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல், பின்னணி பாடகியுடன் காதல் என்று கிசுகிசு வெளியானது குறிப்பிடத்தக்கது.