அரசியல் பேச்சாளர்- நடிகரின் மகன் ஹீரோவானார்..

Advertisement

கோலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் அதிகரித்திருக்கின்றனர். சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ் விக்ரம், தியாகராஜன் மகன் பிரசாந்த், கே.பாக்யாஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜ் மகன் பிருத்வி, மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், ஜெய ராம் மகன் காளிதாஸ், கமல் ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா, மேலும் மயில்சாமி மகன், தம்பி ராமையா மகன், கருணாஸ் மகன், அருண் விஜய் மகன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அரசியல், பட்டிமன்ற பேச்சாளரும், கங்கா கவுரி படத்தில் நடித்ததுடன் பன்னி குட்டி, ஆலம்பபனா ஆகிய படங்களில் நடித்தும் வருபவர் திண்டுக்கல் ஐ லியோனி. இவரது மகன் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். இப்படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர் சூது கவ்வும், பீட்ஸா2 தி வில்லா, ஜானி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அழகிய கண்ணே படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, என்,ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். காடன் திரைப் பட ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத்தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நடை பெற்றது. படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>