கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தாலும் பல ஜோடிகள் இன்னமும் அதே காதலுடன் தங்கள் வாழ்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்று பல ஜோடிகள் தங்களின் பிரியமானவர்களுடன் காதலர் தினம் கொண்டாடினார்கள். நடிகை நஸ்ரியா நாசிம், அல்லு அர்ஜுன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தினத்தை கொண்டாடினர். இந்த ஆண்டு தங்கள் காதலர் தின கொண்டாட்டங்களை அனைவருக்கும் தெரிவிக்க சமூக ஊடகங்களில் அந்த கொண்டாட்டத்தைப் பகிர்ந்தனர்.
மகேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் காதலர் தினத்தைக் கொண்டாடியபோது, விக்னேஷ் சிவன் காதலி நயன்தாராவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். தென்னிந்தியாவில் மிகவும் அபிமான தம்பதிகளில் ஒன்று நஸ்ரியா நாசிம் மற்றும் ஃபஹத் பாசில். காதலர் தினத்தன்று, ஃபஹத் பாசிலுடன் ஒரு வீடியோவைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார் நஸ்ரியா. ஸ்லோ-மோஷன் வீடியோவில் அவர்கள் இருவரும் வெளி நாட்டுப் பயணத்தின்போது அருகருகே அமர்ந்து காற்று வாங்கியபடி பயணம் செய்யும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இரட்டை இதய ஈமோஜி மற்றும் எஃப்எஃப் என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். வீடியோவில், பஹத் கேமராவே நேரான முகத்துடன் பார்க்க நஸ்ரியாவோ காற்றலையில் சிரிப்பலையைத் தவழவிட்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகா ரெட்டி ஜோடி காதலர் தினத்தைக் கொண்டாட ஒருவருக்கொருவர் சில விலைமதிப்பற்ற பொருட்களை பரிசளித்தனர். ஆல வைகுண்டபுரம்ரம்லூ நடிகர் அல்லு அர்ஜூன், சினேகா கொடுத்த பரிசுகளின் படத்தைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு நன்றி தெரிவித்தார்.அவர் "டார்லிங், ஐ லவ் யூ " என்று பல முறை கையால் எழுதப்பட்ட குறிப்பை அவர் கொடுத்ததாக தெரிகிறது.ஐஸ்வர்யா தனுஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான புகைப் படத்தைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவரது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் கட்டிப்பிடித்திருக்கிறார். அந்த படத்தைக் கணவர் தனுஷ் எடுக்க அவருக்கு ஐஸ்வர்யா காதலர் தின வாழ்த்து தெரிவித்தார்.