அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த வலுவான கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், இயக்குனர் அஜய் ஞானமுத்து உறைபனி வெப்ப நிலையில் 'கோப்ரா'விற்காக பணிபுரிகிறார். இயக்குனர் தனது குழுவுடன் 'கோப்ரா'வின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார், மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோவில் வெப்பநிலை தற்போது -18 டிகிரி செல்சியஸ் என்பதால் அதைச் சமாளித்து காட்சிகளைப் படமாக்க வேண்டிய கடுமையான வேலைகள் உள்ளது என்பது தெரிகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து ரஷ்யாவில் நடக்கும் படப் பிடிப்பை விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தற்போது ஐதராபாத்தில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள சியான் விக்ரம் விரைவில் ரஷ்யாவுக்குச் சென்று 'கோப்ரா' படத்திற்காக அஜய் ஞானமுத்துவுடன் இணைய உள்ளார்.
கடந்த மார்ச் 2020ம் ஆண்டில் இல், அஜய் ஞானமுத்து மற்றும் விக்ரம் ஆகியோர் ராஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தினர் .
ஆனால் அங்கு கொரோனா லாக்டவுன் அமல் படுத்தப்பட்டதால் 'கோப்ரா' படப்பிடிப்புக்கு ரஷ்யாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து மீதமுள்ள பணிகளை முடிக்க கிட்டத் தட்ட ஒரு வருடம் காத்திருந்து தனது குழுவுடன் ரஷ்யா சென்றார்.விக்ரம் 'கோப்ரா' வில் பல தோற்றங்களில் காணப்படுவார், இப்படத்தை லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.