ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாகி வருகின்றனர், விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விஷ்ணுவிஷால் சொந்தமாக படங்கள் தயாரிக்கின்றனர். தற்போது இளம் நடிகர் ஒருவர் தயாரிப்பாளராகி இருக்கிறார். ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகி விட்டார்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ் காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக எம்.எஸ். பிரபு செய்கிறார், இசை அமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பணியாற்றுகிறார். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.