Saturday, May 15, 2021

கடற்கரையில் ஜோடியாக சுற்றினால் லவ் இல்லையா? கீர்த்திக்கு நெட்டிஸன்கள் கேள்வி

by Chandru Feb 17, 2021, 10:46 AM IST

சினிமாவில் நட்சத்திரங்கள் காதல் ஒன்றும் புதிதல்ல. ஜெமினிகணேசன் சாவித்ரி முதல் இன்றைய நயன்தாரா, விக்னேஷ் சிவன் வரை இந்த காதல் தொடர்கிறது. சில ஜோடிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சிலர் மறைக்கின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ், இசை அமைப்பாளர் அனிருத் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுபற்றி இருவருமே கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காக்கின்றனர். அவர்கள் தரப்பில் நெருக்கமானவர்கள் மட்டும் அதை மறுத்தனர். இத்தோடு இந்த விவகாரம் முடிந்தது என்று எண்ணினால் அது தொடர் கதையாகி இருக்கிறது.

தற்போது நெட்டில் அனிருத், கீர்த்தி இருவரும் கடற்கரையில் இரவில் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் உலா வருகிறது. கீர்த்தி கறுப்பு நிற டிஷர்ட், ஆஷ் நிற ஃபிராக் அணிந்திருக்க அவரது தோள் மீது கைபோட்டு இழுத்து அணைத்தபடி நிற்கிறார் அனிருத். இந்த படங்களைக் குறிப்பிட்டு இரண்டு இளவட்டங்கள் இரவில் கடற்கரையில் இரவு பார்ட்டி முடித்தபிறகு இப்படி நெருக்கமாக அணைத்தபடி நிற்பதைக் காதல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று நெட்டிஸன்கள் கேட்டு வருகின்றனர்.

நடிகைகள் தங்கள் காதல் விவகாரத்தை மூடி மறைப்பது புதிதல்ல. 2 வருடம் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்று கூறி வந்த நடிகை காஜல் அகர்வாலின் குட்டு லாக் டவுனில் அம்பலமானது. குடும்பத்தினர் அவரை திருமணத்துக்கு வற்புறுத்தியதும் தனது காதலன் கவுதம் கிட்ச்லு பற்றிய தகவலை வெளிப்படுத்தி கடைசியில் அவரை திருமணம் செய்து கொண்டார். பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு நடிகை கயல் ஆனந்தி முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று ரசிகர்களும், திரையுலகினரும் கருதி வந்த நிலையில் சமீபத்தில் தனது காதலனும் திரைப் பட உதவி இயக்குனருமான சாக்ரடீஸை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இப்படி நடிகைகள் எதிர்பாராத சர்ப்ரைஸ் தருவதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் தருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். நடிக்க வந்த சில வருடங்களிலேயே நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். விஜய், விஷால் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் தெலுங்கிலும் முன்னனி ஹீரோக்கள் ஜோடியாக நடிக்கிறார். தற்போது ரஜினிகாந்த் மகளாக அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இசை அமைப்பாளர் அனிருத் கோலிவுட்டில் பிரபல இசை அமைப்பாளர் ஆவார். மேலும் ரஜினிகாந்த் தின் உறவினர்.

கீர்த்தி சுரேஷை பொறுத்த வரை கடந்த ஆண்டு அவரது திருமண கிசு கிசு வெளியானது. அப்போது கேரள பா ஜ தலைவர் ஒருவரின் மகனை மணக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதைக் கீர்த்தியின் குடும்பத்தினர் மறுத்தனர்.அதேபோல் அனிருத் பற்றியும் கிசு கிசு வெளியானது, நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல், பின்னணி பாடகியுடன் காதல் என்று கிசுகிசு வெளியானது. அதெல்லாமே கிசுகிசுவாக மறைந்து போனது.

You'r reading கடற்கரையில் ஜோடியாக சுற்றினால் லவ் இல்லையா? கீர்த்திக்கு நெட்டிஸன்கள் கேள்வி Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை