தோனி வாழ்க்கை படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை.. பாலிவுட்டில் பரபரப்பு..

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி தலைவர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். கடந்த 2020 ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போதை மருத்து வழக்காகவும் மாறியது. இது தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர். அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது ரியா நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த்துடன் நடித்த சந்தீப் நஹர் என்ற நடிகர் நேற்று மும்பையில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்.தூக்கு போட்டுக்கொள்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக அவர் வீடியோவில் தனது மனைவியைக் குற்றம் சாட்டி அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.நடிகர் சந்தீப் நஹர், பாலிவுட்டில் அவர் எதிர்கொண்ட பாலிடிக்ஸ் குறித்தும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு 'தற்கொலைக் குறிப்பில்' குறிப்பிட்டுள்ளார்.

அக்‌ஷய் குமாரின் 'கேசரி' மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'எம்.எஸ். தோனி' போன்ற படங்களில் நடித்துள்ளார் சந்தீப் நஹர்.கடந்த திங்கட்கிழமை நஹரின் படுக்கையறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தொடர்ந்து மனைவி தட்டியும் எந்த பதிலும் வராததால், அவர் தனது நண்பர்களையும், பிளாட்டின் உரிமையாளரையும், ஒரு முக்கிய தயாரிப்பாளரையும் அழைத்தார். கடைசியாக ஒரு டூப்ளிகேட் சாவியுடன் கதவு திறக்கப்பட்டது . நஹர் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.நஹரின் சகோதரரும் தந்தையும் கோரேகான் காவல் நிலையத்துக்குச் சென்று இறுதி சடங்கு செய்ய உடலைக் கோரி பெற்றனர். எந்தவொரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் கோரேகான் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள்.நஹரின் மனைவியிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். ஏனெனில் நஹர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் தான் முதலில் பார்த்த நபர் மற்றும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்.

முன்னதாக தற்கொலை செய்வதற்கு முன் நஹார் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் தனது மனைவி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் விரக்தியடைந்ததாகவும் அவரால் துன்புறுத்தப்பட்டு பிளாக்மெயில் செய்யப்படுவதாகவும், அவரது மாமியாரும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறி உள்ளார்.மேலும் நான் நீண்ட காலத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டிருப்பேன், ஆனால் இந்த பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்பிரச்சினை முடியாது என்பதால் நான் இப்படியொரு முடிவு எடுக்கிறேன். நான் நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், நான் போன பிறகு, தயவுசெய்து காஞ்சனிடம் (அவரது மனைவி) எதுவும் சொல்லாதீர்கள், ஆனால் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும். என்று அவர் கூறினார்.நடிகர் சந்தீப் நஹர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>