25 வருடங்களுக்குப் பின் மலையாளத்திற்கு மீண்டும் வரும் அரவிந்த் சாமி

by Nishanth, Feb 17, 2021, 17:15 PM IST

பிரபல நடிகர் அரவிந்த் சாமி 25 வருடங்களுக்கு பின் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனும் நடிக்கிறார். 'ஒற்று' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழிலும் தயாராகிறது. பிரபல நடிகர் அரவிந்த் சாமி கடந்த 25 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் தேவராகம் என்ற படத்தில் நடித்தார். 1996ல் வெளியான இந்தப் படத்தில் அரவிந்த் சாமியுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, நெடுமுடி வேணு, நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கீரவாணி இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டுகள் ஆகும். திரைக்கதை எழுதி இயக்கிய டைரக்டர் பரதன் தான் இந்தப் படத்தை தயாரித்தார். தேவ ராகத்திற்கு பின்னர் கடந்த 25 வருடங்களாக அரவிந்த் சாமி மலையாளப் படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் 'ஒற்று' என்ற ஒரு புதிய மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் பரபரப்பாக ஓடிய தீவண்டி என்ற படத்தை இயக்கிய பெல்லினி இந்தப் படத்தை இயக்குகிறார். சஞ்சீவ் கதை எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் பிலிம்ஸ் பேனரில் பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மற்றும் ஷாஜி நடேசன் ஆகியோர் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான குஞ்சாக்கோ போபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வரும் 27ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. மங்களூரு, மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தமிழிலும் தயாராகும் இந்தப் படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

You'r reading 25 வருடங்களுக்குப் பின் மலையாளத்திற்கு மீண்டும் வரும் அரவிந்த் சாமி Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை