அசோக் செல்வன் படத்துக்கு விஜய் ஏசுதாஸ் பாட்டு.. “நான் கேட்டேன்” காதல் மெலடி !

Advertisement

காதல் ஒரு அதிஅற்புத உணர்வு, உலகம் இயங்குவதன் அடிநாதமே காதல் தான். காதலின் உச்சநிலை போதை தரவல்லது. அதனால் தான் காதல் பறவைகள் ஒரு நிலையில் இருப்பதில்லை. ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் இந்த உணர்வை, சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதே இல்லை. அப்படியான ஒரு அழகான காதல் தருணம் தீனி படத்திலும் உள்ளது. அதுவே “நான் கேட்டேன்” எனும் மனம் மயக்கும் மென்மையான மெலடி பாடலாக வந்துள்ளது. அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள “தீனி” படத்தினை பாபிநீடு பி வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எல் எல் பி மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் (Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios ) இப்படத்தினை தயாரிக்கின்றன.

பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்கிறார். இயக்குநர் அனி ஐ வி சசி இப்படத்தினை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிப்ரவரி 16 அன்று இப்பாடல் வெளியானது.“நான் கேட்டேன் விண்மீன் பாஷயை காதிலே, என்னோடு நாளும் பேசுதே ராவிலே, என் வீடு பூலொகம், என் நண்பன் தினம் தோள் உரசியே, நடந்திடும் காற்று தான்” எனும் அற்புத வரிகளை கோ.சேஷா எழுதியுள்ளார். அழகு குரலில் விஜய் ஏசுதாஸ் பாடியுள்ளார். மெலடி பாடல்கள் காதல் பொங்கும் அதேநேரம் சாந்தமிகு மெலடியாக ரசிகர்களை தூக்கத்திலும் தாலாட்டுவதாக இருக்கும். படத்தில் அசோக் செல்வன் பாத்திரம் தவிர்த்து அனைவரும் சோர்வான தூக்க கலக்கத்தில் இருக்கும் தருணத்தில் இப்பாடல் வருகிறது.

“தீனி” திரைப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 26 அன்று ஜீ பிளக்ஸ் (ZeePlex) தளத்தில் வெளியாகிறது. இத்திரைப்படம் ரசிகர்களின் நாவூறும் வண்ணம் நேரடியாக அவர்களை சமையலறைக்குள் அழைத்து செல்லும். இப்படத்தில் நடிகர் நாசர் சமையல் கலை வல்லுநராக கலக்கியுள்ளார். நடிகர் சத்யா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவாளர் செய்கிறார். ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். கோ சேஷா பாடல் எழுதுகிறார் ஶ்ரீ நாகேந்திரா தங்கலா அரங்கம் அமைக்கிறார். நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>