பிக்பாஸ் நடிகர் ஹீரோவாக நடிக்கும் வேலன்

by Chandru, Feb 19, 2021, 19:35 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை, மொத்தமாகக் கொள்ளையடித்த முகேன் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் (Skyman Films International) நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார். இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.ஒரு அழகான காதலை காமெடியுடன் கலந்து சொல்லும் இப்படம், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாகிறது. கலைமகன் முபாரக் படத்தினை மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கி வருகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது:குடும்பமாக இணைந்து பார்க்கும், அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள். குடும்பங்களை இணைக்கும் எந்த விதமான கதைகளும் சிறப்பானதாகவே இருக்கும். இன்றைய உலகில் குடும்பங்களுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை, நேர்மறை அம்சங்களைச் சொல்ல வேண்டியது நமது கடமை. அறிமுக இயக்குநர் கவின் பிரபல இயக்குநர் சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. மிக அழகாகப் படத்தினை உருவாக்கி வருகிறார். மிக உற்சாகமான இளமை துள்ளலுடன் இருக்கிறார் நடிகர் முகேன் அது அவரது நடிப்பிலும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அழகான தேவதை போன்று இருக்கிறார் நடிகை மீனாக்‌ஷி. பிரபு, நடிகர் சூரி மிகுந்த ஒத்துழைப்பினை நல்கியுள்ளார்கள்.

அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியினை தந்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அயராத உழைப்பினை தந்து வருகின்றனர். படத்தினை வரும் கோடைக் காலத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார்.

கே.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா ஏ பிள்ளை மற்றும் கே.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் வசனம் எழுதியுள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை, முறையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

You'r reading பிக்பாஸ் நடிகர் ஹீரோவாக நடிக்கும் வேலன் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை