பிரபல நடிகை விபத்தில் சிக்கினார்.. விரல் எலும்பு முறிவு..

Advertisement

1999 ஆண்டு உன்னைத் தேடி படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், திருட்டு பயலே, சந்திரமுகி எனப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். கணவருடன் வசித்து வரும் இவர் இணைய தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.நடிகை மாளவிகா சமீபத்தில் ஒரு விபத்தைச் சந்தித்துள்ளார். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் திருட்டு பயலே நடிகை தனது சமூக ஊடக பக்கத்தில் தனது படத்துடன் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் முகத்தில் காயத்துடன் காணப்படுகிறார். "நான் சைக்கிள் ஓட்டியபோது ஒரு விபத்தைச் சந்தித்தேன், கீழே விழுந்ததில் விரல் எலும்பு முறிந்தது. நான் ஒரு போர் வீரன் சிப்பாய் போன்றவள்! எதையும் எதிர்கொள்வேன். விரைவில் பழைய நிலைக்குத் திரும்புவேன் என்றார்.மாளவிகா 90 களில் பிரபலமான நட்சத்திரம். சுந்தர் சி இயக்கிய உன்னைத் தேடி படத்தில் தல அஜித் ஜோடியாக அறிமுகமானார். ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், லவ்லி, போன்ற பல படங்களில் நடித்தவர் படங்களில் வெற்றிக் கொடி கட்டு படத்தில் கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு ஸ்டைலான நடனம் ஆடி ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்தார்.

அதேபோல் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாலா மீனுக்கு வெலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாடலில் அவரது நடிப்பும் நடனமும் ரசிகர்களின் பாராட்டு பெற்றது.90கால கட்ட நடிகைகளில் பலர் இன்னமும் திரையுலகில் நீடித்து நிலைத்திருக்கின்றனர். சமந்தா. நிஹாரிகா போன்ற பல நடிகைகள் 90களுக்கு பிறகு நடிக்க வந்தாலும் திருமணம் செய்துகொண்டு மீண்டும் நடித்து வருகின்றனர். அசின், நஸ்ரியா, ஜெனிலியா போன்ற சில நடிகைகள்தான திருமணத்துக்கு பிறகு நடிப்பு பக்கம் தலைகாட்டவில்லை. அந்த வரிசையில் மாளவிகாவும் நடிப்பு பக்கம் மீண்டும் தலைகாட்டவில்லை. தற்போது ஏற்பட்ட சைக்கிள் விபத்து மீண்டும் அவரை திரையுலகினருக்கும் , ரசிகர்களுக்கும் ஞாபகம் ஊட்டியிருக்கிறது. வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் ஆட்டம் போட்ட இந்த மாளவிகா மீனை மீண்டும் திரைக்கடலில் நீந்தவிட எந்த இயக்குனர் வலை வீசப்போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>